Published : 09 Nov 2019 08:24 AM
Last Updated : 09 Nov 2019 08:24 AM

சிற்றிதழ் பார்வை: ஒரு ‘மொரட்டு சிங்கிளின்’ கதை

நவீன கலை இலக்கியக் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் தமிழின் மரபிலக்கியங்களையும், சமகால இலக்கியங்களையும் திறனாய்வுசெய்து முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியவர் க.பஞ்சாங்கம். தமிழ்ச் சிற்றிதழ்களில் தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை எழுதிவரும் அவர், ‘காக்கைச் சிறகினிலே’ நவம்பர் 2019 இதழில் மா.அரங்கநாதனின் ‘எங்கேயோ போதல்’ சிறுகதையை சமூக, பொருளாதார, உளவியல் நோக்குகளில் விரிவாக ஆய்வுசெய்திருக்கிறார். ரயில் நிலையத்தில் அடிக்கடி சந்திக்க நேரும் காதல் ஜோடி திருமணம் செய்துகொள்வதற்கு வலியப்போய் உதவுகிறான் மா.அரங்கநாதனின் ‘அவன்’. திருமண நாளன்று ஜோடிகள் திருத்தணி கோயிலுக்குச் செல்வதற்காகப் பயணச்சீட்டு வாங்க குரோம்பேட்டை ரயில் நிலையம் செல்கிறான். தண்டவாளத்தைக் கடக்கின்ற சிறுமியைக் காப்பாற்றும் அவன் தனது உயிரை விடுகிறான். மற்றவருக்கு உதவும்போது எங்கேயோ போவதுபோல் இருக்கிறது என்ற அவனது வார்த்தைகளே கதையின் தலைப்பாகியிருக்கிறது. இக்கதையை மையமாக வைத்து, வாழ்க்கை நெருக்கடிகளால் திருமணத்தைத் தள்ளிப்போட்டு கடைசியில் அது கைகூடாமலே போகும் இளைஞர்களின் வாழ்க்கையின் மீது கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறார் க.பஞ்சாங்கம்.

- பி.எஸ்.கவின்

காக்கைச் சிறகினிலே
ஆசிரியர்: வி.முத்தையா
விலை: ரூ.25
98414 57503

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x