Published : 26 Oct 2019 09:24 AM
Last Updated : 26 Oct 2019 09:24 AM

நூல்நோக்கு: எல்லைப் போராட்டத்தின் முன்னணி வீரர்

தமிழ்ப் பேராசிரியரும் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்தவருமான பி.யோகீசுவரன், சென்னையில் கவிமணி மன்றத்தை நிறுவி நடத்திவருபவர். அவரது ‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’, ‘தமிழக வடக்கெல்லைப் போராட்ட வரலாறு’ வரிசையில் புதிய வரவு இந்நூல். சுதந்திரப் போராட்டத்திலும் தெற்கெல்லைப் போராட்டத்திலும் அதன் பின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் முக்கியப் பங்குவகித்தவர் பி.எஸ்.மணி. அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ‘மணி’, ‘கன்னியாகுமரி’ ஆகிய இதழ்களையும் நாகர்கோவிலில் ‘மணிமலர் நிலையம்’ என்ற புத்தக நிலையத்தையும் நடத்தியவர். இந்நூல், அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் அவரோடு களத்தில் நின்ற மற்ற தலைவர்களையும் பற்றிய வரலாறாகவும் அமைந்திருக்கிறது.

- புவி

தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி
பி.யோகீசுவரன்
அரசி பதிப்பகம்
மாதவரம் பால்பண்ணை, சென்னை-51.
98402 59614
விலை: ரூ. 250

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x