Published : 14 Jan 2017 11:44 AM
Last Updated : 14 Jan 2017 11:44 AM
வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி
நிகண்டுகள், கதிரை வேற்பிள்ளை அகராதி, தமிழ் லெக்சிகன் போன்ற மரபில் மிக முக்கியமான அகராதிகளுள் இதுவும் ஒன்று. கி.பி. 1600 வரையில் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கும் 70,814 சொற்களுக்கு இந்தப் பேரகராதியில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, அந்தச் சொல் முதன்முறையாக எந்த இலக் கியத்தில் இடம்பெற்றதோ அந்த இலக்கியத்திலிருந்தும் மேற்கோள் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் பயனுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சந்தி பிரித்த வெளியீடுகளைக் கொண்டுவந்த மர்ரே ராஜம் முயற்சிகளின் மகத்தான தொடர்ச்சி இது. அவசியம் வாங்க வேண்டிய நூல்.
வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி
(5 தொகுதிகள்)
ரூ. 2,000, சாந்தி சாதனா வெளியீடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT