Last Updated : 15 Jun, 2019 09:11 AM

 

Published : 15 Jun 2019 09:11 AM
Last Updated : 15 Jun 2019 09:11 AM

பிறமொழி நூலகம்- தேர்தல்கள்: ஒரு குறுக்குவெட்டுப் பரிசோதனை

பிரபல ஊடகவியலாளர் பிரணாய் ராயும் கள ஆய்வு நிபுணரான டொராப் ஆர். சொபாரிவாலாவும் இணைந்து இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்கள் குறித்த இந்த நூலை எழுதியிருக்கின்றனர். 1952 முதல் 1977, 1977 முதல் 2002, மற்றும் 2002 முதல் 2019 என இதுவரையிலான இந்தியத் தேர்தல் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கும் ஆசிரியர்கள் இந்தக் காலப் பகுதியில் மக்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் தேர்தல் பங்கேற்பு எவ்வாறு படிப்படியாக முன்னேற்றம் பெற்று வந்துள்ளது என்பதையும், அதில் நிலவும் குறைபாடுகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த இந்நூலின் பரிந்துரைகளைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய கடமை சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு உள்ளது.

த வெர்டிக்ட் – டிகோடிங் இந்தியாஸ் எலெக்‌ஷன்ஸ் – பிரணாய் ராய், டொராப் ஆர். சொபாரிவாலா.

வெளியீடு: விண்டேஜ் – இம்ப்ரிண்ட் ஆஃப் பெங்க்வின் ராண்டம் ஹவுஸ்,

குர்காவ்ன் – 122002

விலை: ரூ. 599,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x