Last Updated : 03 Jun, 2018 09:25 AM

 

Published : 03 Jun 2018 09:25 AM
Last Updated : 03 Jun 2018 09:25 AM

தமிழ் வாசகர்களுக்கு ஓர் விருந்து!

தமிழ் இலக்கிய உலகில் பிரமிளின் பிரவேசம் மகத்தானது. சிறு வயதிலேயே மாபெரும் கலைஞனாக உருக்கொண்டவர் பிரமிள். சிறுபத்திரிகை இயக்கத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டவர்.

கவிதை, கதை, விமர்சனம், நாடகம் என அவரது ஒவ்வொரு படைப்புகளும் அவரது உட்சபட்ச படைப்பாற்றலின் வெளிப்பாடு. அவரது படைப்புகளும், சமரசமற்ற காத்திரமான விமர்சனங்களும் தமிழ் இலக்கியத்தை செழுமையாக்குவதில் பெரும் பங்காற்றின.பிரமிள் படைப்புகளைப் பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டபோதும் அவரின் ஒட்டுமொத்த படைப்புகள் இதுவரை தொகுக்கப்பட்டதில்லை.

இப்போது, லயம் - பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் இறுதியில் பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துகளும் பிரமிளின் நெருங்கிய நண்பரான கால சுப்ரமணியத்தின் முன்முயற்சியில் வெளிவருகின்றன.

கவிதைகள், கதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், பேட்டிகள், உரையாடல்கள், தமிழாக்கம்-அறிவியல்-ஆன்மீகம் என கிட்டத்தட்ட 3400 பக்கங்களில் தனித் தனியாக ஆறு தொகுதிகள் வெளிவருவிருக்கின்றன. மொத்த விலை ரூ. 3400. முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 3000க்கு பதிவுசெய்துகொள்ளலாம். தொடர்புக்கு: 9442680619, kasu.layam@gmail.com.பிரமிள் ஓர் அற்புதமான ஓவியரும்கூட. சிறுபத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் அவர் வரைந்த ஓவியங்களையும் கால சுப்ரமணியம் பதிப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x