நூல் வரிசை: ஸ்ரீஇராமானுஜர் வாழ்வும் வாக்கும்

நூல் வரிசை: ஸ்ரீஇராமானுஜர் வாழ்வும் வாக்கும்
Updated on
1 min read

ஸ்ரீஇராமானுஜர் வாழ்வும் வாக்கும்
மா.சீதாராமன்
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 98402 26661

ராமானுஜர், வைணவச் சான்றோர்களில் சிறப்புமிக்கவர். இவர் செய்த சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகள் அவரைக் கவனம் மிக்கவராக ஆக்குகின்றன. அவர் வாழ்க்கை குறித்த நூல் இது.

காலத்தின் மடியில்
மாசிலாமணி நந்தன்
கலைஞன் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 2834 0488

அரசியல், பகடி, சொந்த அனுபவம் எனப் பல்சுவையாக முகநூலில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு இது. பல சமூக நிகழ்வுகளை, விஷயங்களைக் குறுகத் தரித்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.

தொண்டியம்மா
எரிசினக் கொற்றவன்
சத்யா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 95000 45615

நாட்டார் தொன்மக் கதைகளை இணைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நாட்டார் கோயில்களில் கள ஆய்வு செய்து நூலாசிரியர் இதை எழுதியுள்ளார்.

அம்மாவின் டைரி
குடந்தை பிரேமி
மெளவல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 97877 09687

வெள்ளந்தித்தனமான சிறுகதைகளின் தொகுப்பு. மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நூலாசிரியர் இந்தக் கதைகளை எழுதியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in