Published : 22 Apr 2018 09:30 AM
Last Updated : 22 Apr 2018 09:30 AM

டோபா டேக் சிங்கின் மறுவருகை!

தத் ஹசன் மண்டோவின் கதையை நாடகமாக அரங்கேற்றுவதாக செய்தி அறிந்ததும் வியப்பாக இருந்தது. அதுவும் பள்ளி மாணவர்கள் நிகழ்த்துகிறார்கள் என்பது எனது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. சென்று பார்த்தேன். சென்னை கலைக்குழு பிரளயனின் இயக்கத்தில் ஓசூர் டிவிஎஸ் பள்ளி மாணவர்களால் மண்டோவின் ‘டோபா டேக் சிங்’ கதை, ‘கனவுகள் கற்பிதங்கள்’ எனும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. மண்டோ 1954-ல் எழுதிய கதை இது. 64 ஆண்டுகள் கழித்து இன்றும் நம் சூழலோடு பொருந்திப்போவது வேதனையான விஷயம். மானுடத்தின் இருண்மையை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் மனித மனங்களில் வளர்ந்த குரூரத்தைப் பேசியவை மண்டோவின் எழுத்துகள். ‘டோபா டேக் சிங்’ கதையை ஏற்கனவே வாசித்திருந்தபோது என்னுள் ஒரு கற்பனையான உருவம் கதாபாத்திரங்களுக்கு இருந்தது. அக்கற்பனை உருவத்துக்கு உயிர்கொடுத்ததுபோல இருந்தது மாணவர்களின் பங்களிப்பு. இனி அக்கதையை எப்போது வாசிக்க நேர்ந்தாலும் இவர்களின் உருவமே நினைவில் இருக்கும். இந்த நாடகத்தை ஒவ்வொரு பள்ளிகளிலும் நிகழ்த்த வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மனதில் மனிதநேய சிந்தனைகளை இளம் வயதிலேயே விதைக்க முடியும். இது ஒரு சமூகத்தின், தேசத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

- ந.பெரியசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x