Published : 24 Jan 2018 09:35 AM
Last Updated : 24 Jan 2018 09:35 AM

மனம் கவர்ந்த உளவாளிகள்!

ஜா

ன் பெர்கின்ஸ் எழுதிய புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளுக்கு இந்த ஆண்டு புத்தகக்காட்சியில் நல்ல வரவேற்பு. இரா.முருகவேள் மொழிபெயர்ப்பில் ஏற்கெனவே வெளியான ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகம், தமிழின் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாகியிருக்கிறது. ஜான் பெர்கின்ஸ் எழுதிய மற்றொரு நூலான ‘அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு’, அசோகன் முத்துசாமி மொழிபெயர்ப்பில் ‘பாரதி புத்தகாலயம்’ வெளியீடாக வந்துள்ளது. உலகப் போருக்குப் பிறகு உலக அரசியலில் அமெரிக்கா செய்துவரும் திரைமறைவு வேலைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த இரண்டு நூல்களுமே விற்பனையில் முன்னிலை வகித்தன. இவற்றுடன் அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட ஆலிவர் ஹெம்பர் எழுதிய ‘பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘புரோட்டோகால்ஸ்: யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை’ புத்தகங்களையும் கணிசமான வாசகர்கள் கைகளில் பார்க்க முடிந்தது. உளவு, ஒற்றறிதல் என்று திடுக்கிடும் திருப்பங்களோடு உலக அரசியலைப் படிப்பதும் தனிச்சுவைதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x