Published : 16 Dec 2017 10:44 AM
Last Updated : 16 Dec 2017 10:44 AM

நூல் நோக்கு: தலைவர்களின் தலைவர்

தலைவர்களின் தலைவர்

மிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மக்களின் உயர்வுக்காகவும் பாடுபட்ட கர்மவீரர் காமராசர் செய்த தொண்டு, தியாகம் போன்றவற்றை இன்றைய தலைமுறையினரில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாழ்வில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டுமென்பதைத் தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருந்த காமராசர், அதனால் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். காமராசரின் தொண்டர்களுள் ஒருவராக விளங்கிய பழ.நெடுமாறன், தான் அருகிலிருந்து கண்டுணர்ந்த காமராசர் எனும் ஆளுமையை நமக்கும் மிக நெருக்கமாக அறிமுகம் செய்துவைக்கிறார்.

எந்தவொரு செயலைச் செய்தாலும் மேம்போக்காகச் செய்யாமல், அதன் சமூகத் தேவை கருதி செய்யும் எண்ணம் காமராசருக்கு உண்டு. கல்வித்துறை இயக்குநராக நெ.து.சுந்தரவடிவேலுவையும், காவல்துறை அமைச்சராகக் கக்கனையும், அறநிலையத் துறை அமைச்சராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பரமேஸ்வரனையும் ஆக்கியது காமராசரின் தொலைநோக்குச் சிந்தனைக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். 1958-ல் தமிழக முதல்வராக இருந்த காமராசரைக் கோட்டையில் சென்று, மாணவராக இருந்த பழ.நெடுமாறன் சந்தித்த முதல் கட்டுரை தொடங்கி, 68 கட்டுரைகளிலும் காமராசரின் பன்முக ஆற்றலைப் பதிவுசெய்துள்ளார். நூலின் வடிவமைப்பும் பொருத்தமான படங்களும் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.

- முருகு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x