

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் மஹாலில் பராமரிப்பு இல்லாமல் கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன. இந்த மஹாலை புனரமைக்க மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தெற்கு ரத வீதியில் 1623 - 1659 காலகட்டத்தில் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மஹால் உள்ளது. நடு மண்டல தலைநகரான வில்லி புத்தூரின் நிர்வாகத்துக்காகவும், ஆண்டாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும்போது தங்குவதற்காகவும் திருமலை நாயக்கர் இந்த மஹாலை கட்டியதாகக் கூறப்படுகிறது.
மதுரை நாயக்கர் மஹால் வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த மஹாலில் தங்கும் இடம், தர்பார் மண்டபம் ஆகியவை மட்டுமே தற்போது எஞ்சி உள்ளன. செவ்வக வடிவிலான தங்கும் மண்டபத்தில் 8 வளைவு களிலும் சுதையால் செய்யப்பட்ட அலங்கார வடிவமைப்பு உள்ளது. வட்ட வடிவில் 10 தூண்களுடன் கூடிய தர்பார் மண்டபத்தின் மேற்கூரையில் வண்ண ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூரை முகலா யர்கள் கைப்பற்றியவுடன் இந்த மஹால் நீதி வழங்கும் இடமாக மாற்றப்பட்டது. கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் 1816-ல் மாவட்ட முன்சீப் நீதிமன்ற மாக செயல்பட்டது. விக்டோரியா மகாராணி வெள்ளி விழா கொண் டாட்டத்தின்போது 1887-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் மஹால் புதுப் பிக்கப்பட்டது. அதன்பின்பு மஹாலின் ஒரு பகுதி நீதிமன்றமாகவும், மற்றொரு பகுதி தாலுகா அலுவலகமாகவும் செயல்பட்டு வந்தது. 1921-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் திருமலை நாயக்கர் மஹால் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது.
2007-ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் மஹால் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வரு கிறது. இந்த மஹாலைபார் வையிட நபர் ஒருவருக்கு ரூ.25-ம், வெளிநாட்டினருக்கு ரூ.300-ம் கட்டணமாக வசூலிக் கப்படுகிறது. இந்நிலையில், மஹாலில் போதிய பராமரிப்பு இல்லாததால் தூண்கள் மற்றும் சுவர்க ளின் பூச்சுகள் பெயர்ந்து வருகின்றன. கட்டிடங்கள் சேத மடைந்தும்.
மேற்கூரை மற்றும் சுவர்களில் உள்ள ஓவியங்கள் சிதைந்தும் வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மஹாலை பழமை மாறாமல் புனரமைக்க மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் மற்றும் வர லாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.