தாயால் கைவிடப்பட்டு மீண்டும் கூட்டத்தில் இணைந்த குட்டிக் குரங்கு - வீடியோ வைரல்

தாயால் கைவிடப்பட்டு மீண்டும் கூட்டத்தில் இணைந்த குட்டிக் குரங்கு - வீடியோ வைரல்
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்​பானில் உள்ள ஓர் உயி​ரியல் பூங்​கா​வில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்​காவ் வகை குரங்கு குட்​டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்​டியை மட்​டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.

உயி​ரியல் பூங்கா நிர்​வாகி​கள் அந்​தக் குட்​டிக் குரங்​குக்கு தனியிடத்தை ஏற்​பாடு செய்து அது விளை​யாடி மகிழ உர்​ராங் உடான் வகை குரங்கு பொம்​மை​யைக் கொடுத்​தனர். இந்​தக் குரங்​குக் குட்​டிக்கு `பஞ்ச்' என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மை​யுடன் குட்​டிக் குரங்கு விளை​யாடி வந்​தது. இது தொடர்பான வீடியோ, புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானது.

குட்டி குரங்​குக்கு ஆதர​வாக சோஷியல் மீடி​யாக்​களில் பலரும் குரல் கொடுத்தனர். மக்​காவ் குரங்​கு​கள் மிக​வும் புத்தி கூர்​மை​யானவை. பனி பிரதேசத்​தில் வாழும் இவை, உணவு​களை கழுவி உண்​ண​வும், உப்பு சுவைக்​காக கடல் நீரை சேர்த்​துக்​கொள்​ள​வும் தெரிந்து வைத்​துள்​ளன. மனிதர்​களை போல உடலை சூடாக வைத்​துக்​கொள்ள வெந்​நீர் தொட்​டிகளில் இவை குளிக்​கின்​றன.

தற்​போது 7 மாத​மாகும் இந்த குரங்​குக் குட்​டியை, பார்க்க பொது​மக்​கள் அதிக அளவில் பூங்கா​வுக்கு வரு​கின்​றனர். இது குறித்து உயி​ரியல் பூங்கா காப்​பாளர் கோசுக்கே ஷிகானோ கூறும்​போது, “பஞ்ச் குரங்​குக்​குட்டிக்கு இப்​போது ரசிகர்​கள் அதி​க​மாகி விட்டனர். உர்​ராங் உடான் குரங்கு பொம்​மை​யுடன் பஞ்ச் விளையாடி வரு​கிறது. பிற்​காலத்​தில் இது தனது இனத்​தோடு சேர்ந்து வாழ இந்த பொம்மை உதவும்" என்​றார்.

குரங்​குக்​குட்​டியை வாங்​கு​வதற்கு பிரபல தொழில​திபர் டிரிஸ்​டன் டேட் முன்​வந்​துள்​ளார். இதற்​காக 25 ஆயிரம் டாலர் (இந்​திய ரூபாயில் சுமார் ரூ.2.26 கோடி) தரவும் அவர் முன்​வந்​தார். இதை தனது எக்ஸ் தள பக்​கத்​தி​லும் அவர் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக​விய​லா​ள​ரும், தொழிலதிபருமான எமோரி ஆண்ட்ரூ டேட்​டின் தம்​பி​தான் இந்த டிரிஸ்​டன் டேட்.

இந்​நிலை​யில் குட்​டிக்​குரங்கு பஞ்ச் தனது குரங்​குக் கூட்​டத்​துடன் மீண்​டும் ஒன்​றிணைந்​துள்​ளது. குரங்​குக் கூட்​டத்​தில் உள்ள குரங்கு​களு​டன் அது இணைந்து விளை​யாடி வரு​கிறது. பஞ்ச் குரங்​குக் குட்​டியை, குரங்​கு​கள் கூட்​டம் ஏற்​றுக் கொண்டு அரவணைத்​துக் கொண்​டுள்​ளன. இதுதொடர்​பான வீடியோக்களும் சமூக வலை​தளங்​களில்​ வெளி​யாகி வைரலாகியுள்​ளன.

தாயால் கைவிடப்பட்டு மீண்டும் கூட்டத்தில் இணைந்த குட்டிக் குரங்கு - வீடியோ வைரல்
அரசு பள்ளி நிகழ்வில் மகளிர் உரிமைத் தொகைக்கு எதிரான கருத்தால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in