கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்

கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்
Updated on
1 min read

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்​ட​யம் மாவட்​டம், சங்​களச்​சேரி பெருநகரத் திருச்​சபை​யில் நடை​பெற்ற ஒரு திரு​மணம் அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​யது. ஏனெனில், இத்​திரு​மணத்​தில் பங்​கேற்ற மணமக்​கள், திரு​மணத்தை நடத்தி வைத்த பாதிரி​யார்​கள் என இரட்​டையர்​களால் நிரம்பி வழிந்​தது.

வணி​கக் கப்​பற்​படை​யில் பணி​யாற்​றும் இரட்​டைச் சகோ​தரர்​களான அகில் கே.​தாமஸ் மற்​றும் நிகில் கே.​தாமஸ், தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் பணிபுரி​யும் இரட்​டைச் சகோ​தரி​களான மேகி மேரி மற்​றும் மரியா மேரி ஆகியோரைத் திரு​மணம் செய்து கொண்​டனர்.

இத்​திரு​மணத்​தின் மற்​றொரு சிறப்​பம்​சம் என்​னவென்​றால், காஞ்​சிரப்​பள்ளி மறை​மாவட்​டத்​தைச் சேர்ந்த இரட்டை பாதிரி​யார்​களான தந்தை ஆண்டோ பெஜும்ம்​கட்​டில் மற்​றும் தந்தை அஜோ பெஜும்ம்​கட்​டில் ஆகியோர் இத்​திரு​மணத்தை நடத்தி வைத்​தனர். மேலும், பாலா நகரைச் சேர்ந்த இரட்​டைச் சகோ​தரர்​களான ஜெரோன் ஜேம்ஸ் மற்​றும் ஜோஹன் ஜேம்ஸ் ஆகியோர் பீடத்​தில் அவர்​களுக்கு உதவி​யாக நின்​றனர்.

ஒவ்​வொரு முக்​கிய​மான செயலிலும் இரட்​டையர்​கள் இருக்க வேண்​டும் என்ற யோசனை தற்​செய​லாக நடந்​ததல்ல. இரட்​டையர்​கள் சூழத் திரு​மணம் செய்ய வேண்​டும் என்​பது மணமகள்​களின் நீண்ட நாள் ஆசை. இதை நிறைவேற்ற இரட்டை மணமகன்​கள் தேடினர். பின்​னர், கோத்​தகநல்​லூர் தேவால​யத்​தின் உதவி​யுடன் இரட்​டை பாதிரி​யார்​களைக் கண்​டறிந்​ததன் மூலம் சாத்​தி​ய​மானது.

இதுகுறித்து சகோ​தரி​கள் கூறும்​போது, “இரட்​டையர்​கள் சூழ ஒரு திரு​மணத்தை நடத்த வேண்​டும் என்​பது எங்​கள் சிறு​வயதுக் கனவு. எங்​கள் பெற்​றோரும் குடும்​பத்​தினரும் அதையே விரும்​பினர். இயேசு கிறிஸ்து அதை நனவாக்​கி​னார்” என்​றனர்.

அரி​தான புகைப்​படங்​கள் மற்​றும் பல இரட்​டையர்​களின் பங்​கேற்​புடன் நடை​பெற்ற இந்த விழா, குடும்​பங்​கள் மற்​றும் பகிரப்​பட்ட பயணங்​களின் மகிழ்ச்​சி​யான தருண​மாக அமைந்​ததுடன், விருந்​தினர்​களுக்கு ஒரு தனித்​து​வ​மான அனுபவத்​தை​யும்​ வழங்​கியது.

கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்
எத்தனால் கலப்பு இல்லையென்றால் பெட்ரோல் விலை ரூ.125 வரை உயர்ந்திருக்கும்: பெட்ரோலியத்துறை அமைச்சகம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in