

பிரமோத் பகத், பாவினா படேல்
புதுடெல்லி: ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்களான பிரமோத் பகத், பாவினா படேல் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளனர். 2014 முதல் 2023 வரை 6 பதக்கங்களை பிரமோத் பகத் வென்றுள்ளார்.
பாவினா படேல், 2020 பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.