உடல்நலம் பாதித்த கேட்டரிங் ஊழியர்களுக்காக திருமண நிகழ்ச்சியை நிறுத்தி சிகிச்சை அளித்த மருத்துவர்

உடல்நலம் பாதித்த கேட்டரிங் ஊழியர்களுக்காக திருமண நிகழ்ச்சியை நிறுத்தி சிகிச்சை அளித்த மருத்துவர்
Updated on
1 min read

கண்ணூர்: கேரளாவைச் சேர்ந்த பெண் மருத்​து​வர் ஒரு​வர், தனது திருமண நிகழ்ச்​சி​யின்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்ட கேட்​டரிங் ஊழியர்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​காக திரு​மணக் கொண்​டாட்​டத்​தையே சிறிது நேரம் நிறுத்தி வைத்​தார்.

கேரள மாநிலம், கண்​ணூரில் பெண் மருத்​து​வர் ஷிரின் சுபைர், டாக்​டர் ரிசாஸ் திருமண நிகழ்ச்சி நடை​பெற்​றது. அப்​போது, கேட்​டரிங் குழு​வைச் சேர்ந்த 2 பெண்​களுக்கு திடீரென உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டது. அவர்​களில் ஒரு​வருக்கு மூக்​கில் இருந்து ரத்தம் வந்​த​தாக​வும், மற்​றொரு​வருக்கு தலைச்​சுற்​றல் ஏற்பட்டதாக​வும் கூறப்​படு​கிறது.

அப்​போது அங்​கிருந்​தவர்​கள் ஷிரின் ஒரு மருத்​து​வர் என்​பதை அறிந்து அவரை உதவிக்கு அழைத்​தனர். உடனடி​யாக இரு​வரை​யும் பரிசோ​தித்த ஷிரின், அவர்​களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்​தார். மணக்​கோளத்​தில் இருந்த மருத்​து​வர் தனது திரு​மணச் சடங்​கு​களை சிறிது நேரம் நிறுத்தி வைத்​து, உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்ட கேட்​டரிங் ஊழியர்​கள் இரு​வருக்கு உதவி​னார்.

இதுதொடர்பான வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. கருணை மற்​றும் மருத்​து​வத் தொழிலுக்​கான அர்ப்​பணிப்​புக்கு இது சிறந்த உதா​ரணம் என்று பலரும் பாராட்​டி​யுள்​ளனர். ‘முதலில் மருத்​து​வர்; அதன் பிறகு​தான் மணப்​பெண்’ என்ற வாசகம், அவரது முடிவைப் பா​ராட்​டும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் பயன்​படுத்​தப்​பட்​டு வரு​கிறது.

உடல்நலம் பாதித்த கேட்டரிங் ஊழியர்களுக்காக திருமண நிகழ்ச்சியை நிறுத்தி சிகிச்சை அளித்த மருத்துவர்
உலக பாட்மிண்டன் அரை இறுதியில் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in