உலக ஆப்டோமெட்ரி தினம்: சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மார்ச் 1-ல் விழிப்புணர்வு நடைபயணம்

உலக ஆப்டோமெட்ரி தினம்: சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மார்ச் 1-ல் விழிப்புணர்வு நடைபயணம்
Updated on
1 min read

சென்னை: உலக ஆப்டோமெட்ரி தினத்தை முன்னிட்டு, ஆப்டோமெட்ரி தமிழ் நண்பர்கள் அமைப்பு (OATN) சார்பில் கண் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் மார்ச் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்த அறிக்கை: உலக ஆப்டோமெட்ரி தினம் வரும் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், அதை நினைவுகூரும் வகையில், மார்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை சென்னை எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற உள்ளது.

எலியட்ஸ் கடற்கரையில் உள்ள திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடை முதல் முருகன் இட்லி கடை வரை இந்த நடைபயணம் நடைபெறும். அதாவது, “கண் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு – ஆப்டோமெட்ரிஸ்ட்களின் பங்கு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் கண் பராமரிப்பு நிபுணர்கள், நிறுவனத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட ஆப்டோமெட்ரி துறை சார்ந்தோர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்களுக்கு கண் பராமரிப்பு, பார்வை குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் முதன்மை கண் ஆரோக்கியத்தில் ஆப்டோமெட்ரிஸ்ட்களின் முக்கிய பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், தேசிய மற்றும் மாநில அளவிலான கண் அறிவியல் மற்றும் தொழில்முறை கவுன்சில்களின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ள இருக்கின்றனர்.

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் வழக்கமான கண் பரிசோதனைகளின் அவசியம் மற்றும் தொழில்முறை பார்வை பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என ஆப்டோமெட்ரி தமிழ் நண்பர்கள் அமைப்பு OATN தெரிவித்துள்ளது.

பார்வை பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு அடிப்படை என்பதையும் இந்த நடைபயணம் வலியுறுத்துகிறது. மேலும் விபரங்களுக்கு 98414 03425 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

உலக ஆப்டோமெட்ரி தினம்: சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மார்ச் 1-ல் விழிப்புணர்வு நடைபயணம்
மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்: வைகோ திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in