Published : 13 Apr 2023 06:37 AM
Last Updated : 13 Apr 2023 06:37 AM

ஆடை அலங்கார தொழிலை கைவிட்டு தெருவோர உணவு கடை தொடங்கி பிரபலம் அடைந்தார் கொல்கத்தா மாணவி!

நந்தினி கங்குலி

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆடை அலங்கார தொழிலை கைவிட்டு தெருவோர உணவு கடை தொடங்கிய ஃபேஷன் டிசைன் மாணவி ஒருவர் சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்துள்ளார்.

நம் நாட்டில் தெருவோர உணவு கடைகளுக்கு வாடிக்கையாளர் கூட்டம் அதிகம். இந்த கடைகள் பற்றி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்படுவதால், இதை நடத்துபவர்களும் பிரபலம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கஷ்டங்கள், சாதனைகள் பார்வையாளர்களை ஊக்குவிக்கின்றன. இதேபோல் தெருவோர உணவு கடை நடத்தும் கொல்கத்தா ஃபேஷன் டிசைன் மாணவி ஒருவரின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

நந்தினி கங்குலி என்ற இளம் பெண் ஆடை அலங்கார படிப்பை முடித்து அத்தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தந்தை ரப்பர் தொழிலில் ஈடபட்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பரவல் ஏற்பட்ட போது, அவரது தந்தையின் தொழில் முடங்கியது. நந்தினியின் ஆடை அலங்கார தொழிலும் போதிய வருமானம் இல்லை. அவருக்கு சமையல் நன்றாக தெரியும். இதனால் அவர் தெருவோர உணவகம் தொடங்கினார். அதில் பெங்காலி சைவம் மற்றும் அசைவ உணவுகளை தயார் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். சைவ உணவை ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்துள்ளார். அதில், சாதம், பருப்பு, உருளைக் கிழங்கு வருவல், கத்திரிக்காய் கூட்டு போன்வற்றை வழங்கியுள்ளார். சிக்கன் சாப்பாட்டை ரூ.100-க்கும், மட்டன் சாப்பாட்டை ரூ.200, மீன் உணவை ரூ.70 முதல் 80 வரை விற்பனை செய்கிறார். ஃபேஷன் டிசைன் மாணவி என்பதால், இவர் எப்போதும் மாடர்ன் உடைகளை அணிந்து உணவு பரிமாறுவார். இதுவும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் இவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x