சாதனை முயற்சியாக 24 மணி நேர தொடர் சொற்பொழிவு: விருதுநகரில் 500 பேச்சாளர்கள் பங்கேற்பு

சாதனை முயற்சியாக 24 மணி நேர தொடர் சொற்பொழிவு: விருதுநகரில் 500 பேச்சாளர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகரில் சாதனை முயற்சியாக 24 மணி நேரத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பேச்சாளர்கள் 500 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா புக்- ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறுவதற்காக `அதிகமான பேச்சாளர்கள் பங்கேற்கும் ஸ்பீச் மாரத்தான்' என்ற தலைப்பில் 24 மணி நேர தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி விருதுநகர் சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.

டோஸ்ட் மாஸ்டர்ஸ் மாவட்ட இயக்குநர் ஆர்த்தி மங்கலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பிஹைவ் கம்யூனிகேசன் கிளப் ஆங்கிலப் பயிற்சியாளர்கள் என 500 பேர் பங்கேற்றனர்.

பேச்சுத்திறனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இச்சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தியா புக்-ஆப் ரெக்கார்டின் நடுவர்கள் சாஹர் முன்னிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரேவதி தலைமையிலும் இச்சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விருதுநகர் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப் மற்றும் பிஹைவ் கம்யூனிகேஷன் கிளப் இணைந்து நடத்தின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in