Published : 20 Jan 2023 04:17 AM
Last Updated : 20 Jan 2023 04:17 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 2 ஆண்டுகளுக்குப் பின் ஆற்றுத் திருவிழா கோலாகலம்

ஆற்றுத் திருவிழாவிற்காக கடலூர் தென்பெண்ணை ஆற்றில் குவிந்த பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி / கடலூர்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆற்றுத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

தை மாதப் பிறப்பை, 3 நாட் களுக்கு தொடர்ந்து கொண்டாடும் தமிழர்கள், 5-ம் நாள் ஆற்றுத் திருவிழா மூலம் பொங்கல் விழாநிறைவு பெற்றதாக கருதுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக கரோனாதொற்று காரணமாக ஆற்றுத் திரு விழா நடைபெறாமல் இருந்தது. கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ஆற்றுத் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தென்பெண்ணையாற்று கரையோரப் பகுதிகளில் இவ்விழா விமரிசையாக நடைபெற்றது. இதேபோல் கோமுகி ஆறு, கெடிலம்ஆற்றுப் பகுதியிலும் ஆற்றுத் திரு விழா விமரிசையாக நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவையொட்டி அதிகாலையிலேயே அந்தந்த பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப் பட்டு பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டன.

பக்தர்கள்சாலையோரங்களில் நின்று வழிபட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங் கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். விழாவையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றுத் திருவிழாவையொட்டி, ஆங்காங்கே ஏராளமான தற்காலிக கடைகள் போடப்பட்டிருந்தன.

பொதுமக்கள்ஆற்றில் நீராடி, குடும்பத்தினருடன் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உண வினை உண்டு மகிழ்ந்தனர். சிலர் ஆற்றுப் பகுதிக்கு வந்து, உயிர் நீத்த தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஏராளமான போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டிருந்தனர்.

புதுச்சேரியில் ஆற்றுத் திருவிழா: புதுச்சேரி பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் நேற்று ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பாகூர் மூலநாதர், லட்சுமண நாராயண பெருமாள், குருவிநத்தம் கிருஷ்ணன் சுவாமி, திருப்பனாம்பாக்கம் முத்து மாரியம்மன், சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீர் அம்மன், அரங் கனூர் எரமுடி அய்யனாரப்பன் உள்ளிட்ட கோயில்களின் உற்ச வர்கள் அலங்கரிக்கப்பட்டு ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன.

உற்சவர்கள் தென்பெண் ணையாற்றில் தீர்த்த வாரி செய்து, ஆற்றங்கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரையாம்புத் தூரிலும் தென்பெண்ணையாற்று கரையில் ஆற்றுத் திருவிழா நடை பெற்றது. மதுகடைகள் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x