Published : 12 Oct 2022 02:45 PM
Last Updated : 12 Oct 2022 02:45 PM

அசாம் | சாலையோர தள்ளுவண்டி கடையில் பானிபூரி சாப்பிடும் யானை

அசாம் மாநிலம் தேஜ்பூரில் சாலையோர தள்ளுவண்டி கடையில் தலையை ஆட்டியபடி பானிபூரி சாப்பிடும் யானையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னதாக உப்பியபடி இருக்கும் க்ரிஸ்பியான பூரியின் தலையில் தட்டி, காற்றடைத்திருந்த பூரிக்குள் கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, நிறைந்து வடியும் அளவிற்கு கொத்தமல்லியை அரைத்து கரைத்த புளிப்பேறிய சாறு ஊற்றி தரும் பானிபூரி பலரின் விருப்பாமான சாலையோர சிற்றுண்டி என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. சின்னத் தட்டில் சாறு வடிய வாய்க்கொள்ளாமல் அதக்கிச் சாப்பிடும் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. பானிபூரி சாப்பிடும்போது கடைக்காரின் வேகம் அதிகமா, நாம் சாப்பிடும் வேகம் அதிகமா என நடக்கும் அறிவிக்கப்படாத போட்டியில் எண்ணிக்கை மறந்து விடுவதும், நினைத்து வந்ததை விட கூடுதலாக சாப்பிடுவதும் சகஜமே..

இப்போது ஏன் இந்த பானிபூரி புராணம் என்று கேட்கிறீர்களா... விஷயம் இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வசீகரித்திருக்கும் பானிபூரி நிலத்தில் வாழும் மிகப்பெரிய பாலூட்டியான யானையையும் வசியம் செய்திருக்கிறது. பொய்யில்லை நிஜமே. அசாம் மாநிலம் தேஜ்பூர் என்ற இடத்தில் சாலையோரக் கடையில் மீண்டும் மீண்டும் பானிபூரி கேட்டு வாங்கிச் சாப்பிடும் யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து பானிபூரி விற்கும் வியாபாரிக்கு அருகில் யானை ஒன்று நிற்கிறது. அந்த யானைக்கு அந்த வியாபாரி பானிபூரி கொடுக்கிறார். அதனைச் சாப்பிட்டு முடித்த பின்னர் அடுத்தது வேண்டும் என்பது போல யானை வியாபாரியை பார்க்க, அவரும் ஒன்றன் பின் ஒன்றாக யானைக்கு பானிபூரி கொடுக்கிறார். இங்கேயும் யார் வேகமானவர்கள் என்ற ஒரு அறிவிக்கப்படாத போட்டி உருவாகியிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x