Published : 19 Oct 2019 05:52 PM
Last Updated : 19 Oct 2019 05:52 PM

மன அழுத்தத்தைப் போக்கும் தங்கத் திரவம் ஆலிவ் எண்ணெய் - ஆய்வில் தகவல்

புதுடெல்லி,

சமையலுக்கு உகந்த ஆலிவ் எண்ணெயை பண்டைய கிரேக்கர்கள் ‘திரவ தங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். சமையலில் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் உடல் பொலிவுக்கும் உதவக் கூடியது ஆலிவ் எண்ணெய். மேலும் மன அழுத்தத்தைப் போக்கக் கூடியது ஆலிவ் எண்ணெய் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாவது:

1. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள ஆலிவ் எண்ணெய் உடல் நச்சுத்தன்மைகளை வெளியேற்றக் கூடியது. காலையில் எழுந்ததும் ஆலிவ் எண்ணெயால் 10 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்கள் வரை வாய் கொப்பளிக்க உடலில் குவிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். புத்துணர்ச்சியை அளித்து பற்களையும் வெண்மையாக்கும்.

2, உடல் மசாஜ் செய்யும் போது சில மூலிகைகள் மற்றும் லாவெண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால் ஆலிவ் எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்த்தில் எடுத்துக்கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை வெப்பப்படுத்தும். அதனால் தசைகளின் ரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகும். இதன்மூலம் நிணநீர் வடிகட்டலை எளிதாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையையும் அளிக்கும்.

3. மசாஜ் செய்யும் போது நறுமண சிகிச்சை முக்கியமானது என்கிறார்கள். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தமாட்டார்கள். காரணம் கேட்டால், இது எதிர்ப்பு அழற்சி சேர்மங்களைக் கொண்டிருக்கிறது, எனவே வலிநிவாரணி என்று கூறி ஒதுக்கிவிடுவார்கள்.

உண்மையில் இது ஒரு சிறந்த அரோமாதெரபிக்கான எண்ணெய் ஆகும். ஆலிவ் எண்ணெயில் நறுமண சிகிச்சை மேற்கொள்ளும்போது மன அழுத்தத்தைக் குறைக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

4. புருவங்களில், கண் இமைகளில் வரைந்த மைகளை அகற்ற ஒரு விலையுயர்ந்த ஒப்பனை நீக்கிகளுக்கென்று தனியாக செலவு செய்கிறோம். சாதாரணமாக அவற்றை துடைத்துவிட்டு ஆலிவ் எண்ணெயில் நனைத்த காட்டன் பந்தினால் தடவினாலே கண் மை கரைந்துவிடும். அதேநேரம் கண் இமை வளர்ச்சியையும் தூண்டிவிடும்.

5. தோற்றப் பொலிவில் அழகான நகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு பருத்தி பந்தை ஆலிவ் எண்ணெயில் நனைத்து, தூங்குவதற்கு முன் ஒவ்வொரு இரவும் நகங்களில் தடவி வந்தால். அதில் உள்ள 'வைட்டமின் ஈ' நக வெட்டுக்களை மென்மையாக்குகிறது. உலர்ந்த உடையக்கூடிய நகங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது.

6. பாதங்களில் ஏற்பட்டுள்ள சின்னஞச்சிறிய வெடிப்புகளை போக்கவும் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. முதலில் பியூமிஸ் கல்லால் தேய்த்துவிட்டு, பின்னர் ஆலிவ் எண்ணெயை காலில் தடவவும். நீங்கள் தூங்கும் போது ஈரப்பதமூட்டும் சிகிச்சைக்காக காட்டன் சாக்ஸ் அணிந்து உறங்கினால் பாத வெடிப்பு போயே போச்சு.

7. தலைமுடியில் ஆழமாக ஈரப்பத மூட்டக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள பொடுகுகளை அழிக்கும். சூடான ஆலிவ் எண்ணெயுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்து, இரவில் ஊறவைத்து, காலையில் ஷாம்பூவுடன் குளித்தால் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x