Last Updated : 28 May, 2019 12:21 PM

 

Published : 28 May 2019 12:21 PM
Last Updated : 28 May 2019 12:21 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் ரீவைண்ட்: சச்சின் சாம்ராஜ்ஜியம்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் ஏராளம். தனி நபராக அவர் செய்த சாதனைகள் உலகக் கோப்பையில் தனித்துவமிக்கவை. உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளவரை சச்சினின் சாதனைகள் பேசப்படும்.  அவருடைய சாதனைகள்:

# உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆறு முறை பங்கேற்ற ஒரே வீரர் என்ற சிறப்பை பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத் மட்டுமே வைத்திருந்தார். அந்தச் சாதனையை 2011-ல் சச்சின் சமன் செய்தார். 1992 - 2011 வரை தொடர்ச்சியாக 6 தொடர்களில் பங்கேற்றார்.

# அதிகப் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்குக்கு முதலிடம். 46 போட்டிகளில் அவர் பங்கேற்றார். இரண்டாமிடம் சச்சினுக்கு.  45 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

# ஒட்டுமொத்தமாக அதிக ரன் அடித்த வீரர் சச்சின். மொத்தம் 2,278 ரன்களைக் குவித்துள்ளார். இதன் சராசரி 56.65.

# அதிக சதம் அடித்த வீரர் சச்சின் மட்டுமே. 6 சதங்கள் விளாசியுள்ளார் (3 முறை 90 ரன்களுக்கு மேல் அவுட் ஆனது தனி).

# அதிக அரை சதங்கள் அடித்த வீரரும் சச்சினே. 21 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

# ஒரே உலகக் கோப்பையில் அதிக அரை சதங்கள் அடித்தவர் சச்சின். 2003 உலகக் கோப்பையில் 7 அரை சதங்களை விளாசினார்.

# ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் சச்சினுக்கே முதலிடம். 2003-ல் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்களைக் குவித்தார்.

# அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவரும் இவரே. 9 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள சச்சின், 2003-ல் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x