மாமன், மருமகன் உறவை கொண்டாடும் ‘வழுக்கு மரம் ஏறும் போட்டி’ - வத்தலக்குண்டு அருகே சுவாரஸ்யம்

மாமன், மருமகன் உறவை கொண்டாடும் ‘வழுக்கு மரம் ஏறும் போட்டி’ - வத்தலக்குண்டு அருகே சுவாரஸ்யம்
Updated on
1 min read

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே மருமகன்கள் வழுக்கு ஏற, மாமன்கள் தடுக்க என வழுக்கு மரம் ஏறும் போட்டி சுவாரசியமாய் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாமன் முறை உள்ளவர்களால் நட்டு வைக்கப்பட்ட வழுக்கு மரத்தில் மருமகன் முறை உள்ளவர்கள் ஏறும் வினோத விளையாட்டு போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. போட்டியில் மாமன் முறை உள்ளவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் 11,000 ரூபாயை தொங்க விட்டனர்.

பின்னர், மருமகன், மாப்பிள்ளை உறவு முறை உள்ளவர்களை வழுக்கு மரம் ஏற அழைப்பு விடுத்தனர். போட்டிப் போட்டு மருமகன்கள் மரம் ஏற, மாமன்கள் தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.

மரம் ஏற முடியாமல் வழுக்கி விழுந்த மருமகன்களை, மாமன்கள் பார்த்து ரசித்தனர். போட்டிநேரத்திற்குள் மருமகன்கள் மரம் ஏறாததால் மாமன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாமன், மருமகன் உறவுகளை கொண்டாடும் விதமாக நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in