Published : 30 Aug 2023 06:21 AM
Last Updated : 30 Aug 2023 06:21 AM

'அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்': 111 வயது பிரிட்டன் தாத்தா அறிவுரை

லண்டன்: மனிதன் எல்லாவற்றிலும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம் என தனது நீண்ட கால வாழ்வின் ரகசியம் குறித்து 111 வயது பிரிட்டன் தாத்தா மனம் திறந்துள்ளார்.

கடந்த 1912-ல் லிவர்பூலில் பிறந்தவர் ஜான் டின்னிஸ்வுட். இவர் கடந்த ஆகஸ்ட் 26 அன்று தனது 111-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவரின் பிறந்த நாளுக்கு மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் சிறப்பு வாழ்த்து அட்டையை அனுப்பி கவுரவப்படுத்தினர். இங்கிலாந்தின் மிக மூத்த மனிதராக ஜான் டின்னிஸ்வுட் கருதப்படுகிறார்.

தற்போது சவுத்போர்டில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசித்து வரும் அவர் தனது பிறந்தநாளை மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கொண்டாடினார்.

நீண்ட ஆயுள் குறித்து ஜான் தாத்தா பிபிசியிடம் கூறுகையில், “அனைத்தையும் மிதமான, அளவோடு வைத்துக் கொள்ளும் தன்மை. உடற்பயிற்சி, எழுதுதல், கேட்டல் என எல்லாவற்றிலும் நிதானத்தை கடைபிடித்து வருகிறேன். நான் வயதைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனது நண்பர்களுடன் எப்போதும்போல் ஜாலியாக பேசி பழகுகிறேன். இதுவே என் சுறுசுறுப்புக்கு முக்கிய காரணம்’’ என்றார்.

பிரிட்டன் தாத்தாவின் 111-வது பிறந்தாள் கொண்டாட்டங் களின் வீடியோவை பிபிசி பகிர்ந்துள்ளது. இதையடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி வெனிசுலாவில் வசித்து வரும் ஜூவான் விசென்டே பெரெஸ்மோரா (114 வயது) என்பவர்தான் உலகின் மிக வயதான தாத்தாவாக உள்ளார். இவர், மே 27, 1909-ல் பிறந்தவர்.

மேலும், உலகின் மிக அதிக வயதான பாட்டியாக ஸ்பெயினில் வசித்து வரும் மரியா பிரான்யாஸ் மோரேரா உள்ளார். மார்ச் 4, 1907-ல் பிறந்த அவருக்கு தற்போது வயது 116.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x