

புதுடெல்லி: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அபிஜித் திப்கே வெளியிட்டுள்ள வீடியோவில், “நானும், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரும் கைது செய்யப்பட்டுவிட்டோம். நாங்கள் இல்லாத நேரத்தில், அஜிங்கிய ஷிண்டே (35) போராட்டத்தையும் சிஜேபி இயக்கத்தையும் முன்னின்று வழி நடத்துவார். அவரைப் பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷிண்டே, திப்கேவின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த ஷிண்டே, பி.டெக் படித்துள்ளார். ஆம் ஆத்மியின் சமூக வலைதளத்தள பிரிவில் திப்கேவும் ஷிண்டேவும் ஒன்றாகப் பணியாற்றினர். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.
மகாராஷ்டிர ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய ஷிண்டே தற்போது சிஜேபியின் மூத்த தலைவராக விளங்குகிறார்.