மகளிர் மசோதா நிறைவேறாதது அரசின் தோல்வி அல்ல: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து

மகளிர் மசோதா நிறைவேறாதது அரசின் தோல்வி அல்ல: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: மக்​களவை​யில் மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்த வகை செய்​யும் மசோதா நிறைவேற்​றப்​ப​டாதது அரசின் தோல்வி அல்ல என்று மத்தியஅமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​தார்.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் சிறப்பு கூட்டம் கடந்த 16-ம் தேதி தொடங்கிது. அன்​றைய தினம் மகளிர் இட ஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த வகை செய்​யும் அரசி​யல் சாசன திருத்த (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. இதன் மீது நடை​பெற்ற விவாதத்​துக்​குப் பிறகு நேற்று முன்​தினம் வாக்​கெடுப்பு நடை​பெற்​றது. இதில் மசோதா தோல்வி அடைந்​தது. இந்​நிலை​யில், 3-ம் நாளான நேற்று மக்​களவை கூடியதும், சபா​நாயகர் ஓம் பிர்லா நிறைவு உரை​யாற்​றி​னார். இத்​துடன் பட்​ஜெட் கூட்​டத் தொடர் முடிவடைந்​தது. இதையடுத்​து, நாடாளு​மன்​றம் மறு தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, ‘‘எங்​களிடம் பெரும்​பான்மை உள்​ளது. ஆனால், அரசி​யலமைப்பு திருத்த மசோ​தாவை நிறைவேற்ற தேவை​யான மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை எங்​களுக்​குக் கிடைக்​க​வில்​லை. இதனால் வாக்​கெடுப்​பின் போது மகளிர் இட ஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது.

எனினும், இதை அரசின் தோல்​வி​யாகக் கருதக் கூடாது. இந்த மசோதா தோற்​கடிக்​கப்​பட்​ட​தால், பெண்​களின் கோபத்தை காங்​கிரஸ் கட்சி எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கும். பெண்​களுக்கு எதி​ரானவர்​கள் என்ற பெய​ரால் ஏற்​படும் பாதிப்​பு​களை எதிர்க்​கட்​சிகள் அனுபவிக்க வேண்​டி​யிருக்​கும்’’ என்றார்.

மகளிர் மசோதா நிறைவேறாதது அரசின் தோல்வி அல்ல: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in