ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்கா தனது வாக்​குறு​தியை மீறிய​தால், ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு முதல் கட்ட பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்​தது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் - லெப​னான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​ட​தால், ஹார் முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தாக ஈரான் அறி​வித்​தது. இதையடுத்து ஈரான் துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகை விலக்கி கொள்​ளப்​படும் என அமெரிக்கா வாக்​குறுதி அளித்​திருந்​தது.

இந்​நிலை​யில் அமெரிக்கா - ஈரான் இடையே இறுதி ஒப்​பந்​தம் ஏற்​படும் வரை ஈரான் துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகை தொடரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இது ஒப்​பந்த விதி​மீறல் என்​ப​தால், ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடி கட்​டுப்​பாடு​கள் விதிப்​ப​தாக ஈரான் ராணுவம் அறி​வித்​தது.

இதற்​கிடை​யில், ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​பட்​ட​தாக அறி​விப்பு வெளி​யான​தால், ‘ஜக் ஆர்​னவ், சன்​மர் ஹெரால்​டு’ ஆகிய 2 இந்​திய ஆயில் டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்​றன. அப்​போது ஈரான் ராணுவத்​தினர் 2 படகு​களில் வந்து எச்​சரிக்கை விடுக்​காமல், ‘ஜக் ஆர்​னவ்’ கப்​பல் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். ஆனால் சன்​மர் ஹெரால்டு கப்​பல் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​த​வில்​லை.

இதையடுத்து இந்த 2 கப்​பல்​களும் ஹார்​முஸ் பகு​திக்கு திரும்பி சென்​றன. இதில் கப்​பலுக்​கும் அதில் உள்ள ஊழியர்​களுக்​கும் எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்லை. துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்ட ‘ஜக் ஆர்​னவ்’ என்ற இந்​திய கப்​பல், ஈராக்​கில் இருந்து 20 லட்​சம் பேரல் கச்சா எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு வந்​தது.

இந்​தியா அதிருப்தி: ஈரானின் 3 போர்க் கப்​பல்​களை, அமெரிக்க கடற்​படை​யின் தாக்​குதலில் சிக்​காமல் வீரர்​களு​டன் இந்​தியா பாது​காத்து வரு​கிறது. இந்​நிலை​யில் இந்​திய ஆயில் டேங்​கர் கப்​பல் மீது ஈரான் ராணுவம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யுள்​ளது. இது தொடர்பாக இந்​திய அதி​காரி​கள் ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க இந்​திய ஆயில் டேங்​கர் கப்​பல்​களுக்கு எந்த தடை​யும் இல்​லை. எனவே, இந்த தாக்​குதல் குறித்து இந்​திய கடற்​படை​யும் விசா​ரித்து வரு​கிறது. ஓமன் வளை​குடா பகு​தி​யில் உள்ள 3 இந்​திய போர்க் கப்​பல்​கள், இந்​திய ஆயில் டேங்​கர் கப்​பல்​களுக்​குப் பாது​காப்​பு அளிக்​கும்​ பணி​யில்​ ஈடு​படும்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் மெக்கல்லம்? - பீட்டர்சன் கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in