ரூ.25,000 கடனுக்காகப் பறிபோன 4.5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுக்கு பின் மீட்ட பெண்

ரூ.25,000 கடனுக்காகப் பறிபோன 4.5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுக்கு பின் மீட்ட பெண்
Updated on: 
1 min read

லாத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் லாத்​தூர் மாவட்​டம், சாகூர் தாலுகா, கல்​குட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் முண்​டு​பாய் இரப்பா தாவ்ரே என்ற பெண்மணி. இவர் கடந்த 1995-ல் தனது மகள் திரு​மணச் செல​வுக்​காக, உள்​ளூர் வட்​டிக் கடைக்​காரரிடம் 4.5 ஏக்​கர் நிலத்தை அட​மானம் வைத்து ரூ.25,000 கடன் வாங்​கி​ இருந்​தார்.

விளைச்​சலைப் பகிர்ந்​து​கொள்​வ​தாகக் கூறி நிலத்​தைக் கட்​டுப்​பாட்​டில் எடுத்த அந்த வட்​டிக் கடைக்​காரர், போலியாக நிலத்தை தன் பெயருக்கு விற்​பனைப் பத்​திர​மாக மாற்​றிக் கொண்​டார். சில ஆண்​டுகளுக்​குப் பின், முண்​டு​பாய் ரூ.2.5 லட்​சத்​துடன் நிலத்தை மீட்​கச் சென்​றபோது, வட்​டித் தொகை ரூ.10 லட்​ச​மாக உயர்ந்​து​விட்​ட​தாகக் கூறி நிலத்​தைத் தர மறுத்​துள்​ளார்.

இதையடுத்து, குடும்​பத்​தா​ரின் துணை​யுடன் முண்​டு​பாய் மாவட்ட நிர்​வாகத்தை அணுகினார். லாத்​தூர் மாவட்ட ஆட்சி​யர் பாரத் பஸ்தவாத், வட்​டாட்​சி​யர் மற்​றும் காவல்​துறை கண்​காணிப்​பாளர் அமோல் தம்பே ஆகியோர் இது​குறித்து தீவிர விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில் 1995-ல் நடந்த மோசடி தெரிய​வரவே, நிலப் பதிவேடுகள் உடனடி​யாக திருத்​தப்​பட்டு, எவ்​விதக் கட்​ட​ணமும் இன்றி நிலம் மீண்​டும் முண்​டு​பாயின் பெயருக்கே மாற்​றப்​பட்​டது. நிலத்தை மீட்க உதவிய ஆட்சி​யர், காவல் கண்​காணிப்​பாளர் மற்​றும் உள்​ளூர் வட்​டாட்​சி​யர் ஆகியோ​ருக்கு அவர் நன்றி தெரி​வித்​தார்.

ரூ.25,000 கடனுக்காகப் பறிபோன 4.5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுக்கு பின் மீட்ட பெண்
காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

X