டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி

அதிகாரிகள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?
டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on: 
2 min read

புதுடெல்லி: நீதிமன்ற உத்​தரவை மீறி டெல்லி​யில் மெட்ரோ நிலை​யங்​கள் மூடப்​பட்​டது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. அதி​காரி​கள் மீது ஏன் அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்​ப​தற்கு மத்​திய அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டுள்​ளது.

டெல்லி​யில் போராட்​டங்​களை ஒட்டி விதிக்​கப்​பட்ட கட்டுப்பாடுகள், கைது நடவடிக்​கைகளுக்கு எதி​ரான மனுக்​களை நீதிப​தி​கள் ஜாய் மால்யா பக்​சி, வி. மோகனா அடங்​கிய சிறப்பு அமர்வு விசா​ரித்​தது. நீதி​மன்ற உத்​தரவை மீறி 45 மெட்ரோ நிலையங்​கள் மூடப்​பட்​ட​தாக​வும், இதற்​காக மத்​திய உள்​துறைச் செயலர், டெல்லி காவல் ஆணை​யர், மெட்ரோ நிறு​வனத் தலை​வர் ஆகியோர் மீது அவம​திப்பு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் மனுதாரர்கள் வலி​யுறுத்​தினர்.

அமை​தி​யாகப் போராடிய​வர்​கள், வழக்​கறிஞர்​கள், கட்​சித் தலைவர்​கள், முன்​னாள் முதலமைச்​சர்​களைக் காவல்​துறை கைது செய்​த​தாக​வும் அவர்​கள் குற்​றம்​சாட்​டினர். “ஜன​நாயக நாட்​டில் அமை​தி​யாகப் போராட உரிமை இல்​லை​யா?” என்று கேட்ட அவர்​கள், உச்சநீதி​மன்​றத்​துக்கு வெளி​யேகூட 144 தடை உத்​தரவு போடப்​பட்​ட​தாக​வும் சுட்​டிக்​காட்​டினர்.

இதற்​குப் பதிலளித்த சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, கைது செய்​யப்​பட்ட அரசி​யல் தலை​வர்​கள் அனை​வரும் விடுவிக்கப்​பட்​டு​விட்​ட​தாகக் கூறி​னார். மெட்ரோ சேவை நிறுத்தப்​பட​வில்லை், கட்​டுப்​பாடு​களு​டன் இயக்​கப்​பட்​டது், தற்​போது எல்லா நிலை​யங்​களும் திறக்​கப்​பட்​டுள்​ளன என்று தெரிவித்​தார்.

பின்னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு​கள்: எந்​தெந்த வழித்தடங்களில் மெட்ரோ நிலை​யங்​கள் மூடப்​பட்டன என்​பது குறித்து டெல்லி காவல்​துறை வரைபடத்​துடன் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். மேலும், நீதி​மன்ற உத்​தர​வைச் செயல்​படுத்​தத் தவறியதற்​காக ஏன் அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்ப​தற்கு மத்​திய உள்​துறைச் செயலர், டெல்லி காவல் ஆணையர்.

டெல்லி மெட்ரோ நிறு​வனத் தலை​வர் ஆகியோர் வரும் 13-ம் தேதிக்​குள் பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும். அமைதி வழி​யில் கூடு​பவர்​களைச் சட்​ட​விரோத​மாகக் கைது செய்​யக் கூடாது. மெட்​ரோ, ரயில் மற்​றும் இணை​யச் சேவைகளைத் தடுக்​காமல் பொது​மக்​கள் நடமாட அனு​ம​திக்க வேண்​டும். உச்ச நீதி​மன்​றம் அருகே உள்ள தடைகளை உடனே அகற்ற வேண்​டும்.

டெல்​லி​யில் சிஜேபி 2-வது நாளாக போராட்​டம்

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி விவ​காரம் தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும் என்று சிஜேபி வலி​யுறுத்தி வரு​கிறது. இதுதொடர்​பாக அந்த அமைப்பு சார்​பில் டெல்​லி​யில் நேற்று முன்தினம் கால​வரையற்ற போராட்​டம் தொடங்​கப்​பட்​டது. முதல் நாளில் 7,000-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இரண்​டாவது நாளாக சிஜேபி சார்​பில் டெல்​லி​யில் நேற்று போராட்டம் நீடித்​தது. ஜந்​தர் மந்​தர் பகு​தி​யில் போராட்டக்காரர்களை நுழைய​வி​டா​மல் தடுக்க 6 அடுக்கு பாதுகாப்பு போடப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து டெல்​லி​யின் கன்​னாட்​பிளேஸ், ஐஎன்ஏ மார்க்​கெட், மண்டி ஹவுஸ், படேல் சவுக், டால்​ஸ்​டாஸ் சாலை உள்​ளிட்ட பகு​தி​களில் சிஜேபி போராட்டக்​காரர்​கள் குவிந்து போராட்​டங்​களில் ஈடு​பட்​டனர்.

டெல்லி பத்​திரி​கை​யாளர் மன்ற வளாகத்​தில் இரு செய்தியாளர்களை போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாக வேனில் அழைத்​துச் சென்​றனர். அப்​போது ஏற்​பட்ட மோதலில் செய்தியாளர்​களுக்கு ரத்த காயங்​கள் ஏற்​பட்​டன. கன்​னாட்​பிளேஸ் உள்​ளிட்ட பகு​தி​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட 100-க்​கும் மேற்​பட்​டோர்

கைது செய்​யப்​பட்டு பேருந்​து, வேன்​களில் அழைத்துச் செல்​லப்​பட்​டனர். அப்​போது போலீ​ஸாருடன் ஏற்​பட்ட மோதலில் பலருக்கு காயங்​கள் ஏற்​பட்​டன. போலீஸ் தரப்​பில் சிலர் காயமடைந்​தனர். கன்​னாட்​பிளேஸ் பகு​தி​யில் சிஜேபிக்கு ஆதர​வாக நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்ட மார்க்​சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்​டாஸ் கைது செய்​யப்​பட்டு குண்​டு​க்கட்​டாக தூக்​கிச் செல்​லப்​பட்​டார்.

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி
‘ஓராண்டு வரை அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது’ - நிபந்தனை ஜாமீனில் சிஜேபி நிர்வாகிகள் விடுதலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in