“ரஷ்யாவிடம் நாம் எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி ஏன் தேவை?” - மக்களவையில் ராகுல் கேள்வி

“ரஷ்யாவிடம் நாம் எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி ஏன் தேவை?” - மக்களவையில் ராகுல் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க நமக்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை? நாம் எந்த நாட்டில் எரிபொருள் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு ஏன் முடிவு செய்ய வேண்டும்?” என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ஈரான் போரால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “ஈரான் போரால் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க நமக்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை? நாம் எந்த நாட்டில் எரிபொருள் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு ஏன் முடிவு செய்ய வேண்டும்? இது குறித்த புதிரை நான் கண்டுபிடித்துவிட்டேன், அவர்கள் இதில் சமரசம் செய்துகொண்டுள்ளனர்” என்றார்

மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியைச் சுட்டிக்காட்டி, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நண்பர் என்று புரி கூறியதாகவும், புரியின் மகள் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறும் ஒரு காகித ஆவணத்தையும் காட்டினார்.

மக்களவையில் எப்ஸ்டீன் விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, “விவாதப்பொருள் குறித்து மட்டுமே பேச வேண்டும், மற்ற விஷயங்கள் குறித்து பேச வேண்டாம்” என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

“ரஷ்யாவிடம் நாம் எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி ஏன் தேவை?” - மக்களவையில் ராகுல் கேள்வி
எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் வேண்டாம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in