

சென்னை: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார்.
ஏப். 23ல் தமிழக தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 9ல் புதுச்சேரி தேர்தல்:புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 9ல் அசாம் தேர்தல்: அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 4ல் கேரள தேர்தல்: கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 4-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 23், 29 தேதிகளில் மே. வங்க தேர்தல்: மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 13ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.