காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள், மாநிலத் தலைவர்களுடன் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோ​சனை நடத்​தினர்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி கேரள மாநிலத்​தில் மட்​டும் வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது. இந்​நிலை​யில் நேற்று டெல்​லி​யில் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் கார்கே தலை​மை​யில் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள், நிர்வாகிகளின் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, பொதுச் செய​லா​ளர்​கள் பிரி​யங்கா காந்தி வதே​ரா, கே.சி.வேணு கோ​பால், ஜெய் ​ராம் ரமேஷ், பூபேஷ் பாகேல், மூத்த நிர்​வாகி​கள், கட்​சி​யின் மாநிலப் பிரிவுத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தின்​ போது கட்​சி​யின் அடுத்த கட்ட நடவடிக்​கைகள், அரசி​யல் போராட்​டங்​களில் ஈடு​படு​தல், கட்​சி​யின் எதிர்​காலத் திட்​டங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் விவா​திக்​கப்​பட்​டன.

இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் கார்கே தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: பண வீக்​கம், வேலை​யின்​மை, தேர்வு முறை​கேடு​கள் மற்​றும் சமூக ஏற்​றத் ​தாழ்வு போன்ற கடுமை​யான சவால்​களை நாடு எதிர்​கொண்டு வரு​கிறது. இந்நிலை​யில் நீட் தேர்வு மற்​றும் பல்​வேறு பணி நியமனத் தேர்வுகளில் வினாத்​தாள் கசிவு, கல்வி அமைப்பு தொடர்​பான சர்ச்​சைகள் ஆகியவை லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினரின் நம்​பிக்​கையை உலுக்​கி​யுள்​ளன.

பாதிக்​கப்​பட்ட மாணவர்​கள் மற்​றும் இளைஞர்​களைத் தனிப்​பட்ட முறை​யில் சந்​தித்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, அவர்​களு​டன் நிற்​ப​தாக உறுதி அளித்​துள்​ளார். நீட் தேர்​வு, பணி நியமனத் தேர்வு விவ​காரங்​களில் காங்​கிரஸ் கட்சி போராட்டத்தை முன்​னெடுக்​கும். துர​திர்​ஷ்ட​வச​மாக, பல தசாப்​ தங்​களாகக் கட்​டமைக்​கப்​பட்ட நிறு​வனங்​களும் அமைப்​பு​களும் இன்று திட்​ட​மிட்டு பல வீனப்​படுத்​தப் ​படு​கின்​றன.

எனவே, அரசி​யல் போராட்​டத்தை முன்​னெடுப்​பது மட்டுமல்லாமல், இந்​தி​யா​வின் அரசி​யலமைப்​பு, ஜனநாயகம் மற்றும் சமூக நீதி​யைப் பாது​காப்​பதும் நமது பொறுப்​பாகும். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​காக காங்​கிரஸ் மூத்த தலை​வர் மீனாட்சி நடராஜன்​ ​தாக்​கல்​ செய்​த வேட்​புமனு நி​ராகரிக்​கப்​பட்​ட விவகாரம்​ தொடர்​​பாக​வும்​ கூட்​டத்​தில்​ வி​வா​திக்​கப்​பட்​ட​தாகத்​ தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை
‘நீட்’ விலக்கு அளிக்கவும், கோவையில் 2-வது எய்ம்ஸ் அமைக்கவும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in