

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியிலுள்ள ரயில்வே கிராஸிங் வழியாக ஒரு பள்ளிப் பேருந்து நேற்று காலை சென்றது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில், பேருந்து மீது மோதியது. இதில் 3 பள்ளிக் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ரயில்வே கிராஸிங் கேட்மேன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நேற்று காலை 6.40 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. ரயில்வே கிராஸிங்கில் கேட் திறந்திருந்ததால் பள்ளி பேருந்து மீது ரயில் மோதியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.