குஜராத்தில் 5 தீவிரவாதிகள் கைது: நாடு தழுவிய குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு

பிலால் ஆபித் ஷெரா, முகமது அயூப் சுனசரா, முகமது ஹசன் கரடியா, முகமது அயூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி

பிலால் ஆபித் ஷெரா, முகமது அயூப் சுனசரா, முகமது ஹசன் கரடியா, முகமது அயூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி

Updated on
1 min read

அகமதாபாத்: இந்​தி​யா​வில் குண்​டு​வெடிப்பு நடத்​த சதித்​திட்​டம் தீட்​டிய 5 தீவிர​வா​தி​களை குஜ​ராத் போலீ​சார் கைது செய்​துள்​ளனர். இவர்​கள் ‘ஜெய்ஷ்-இ-​முகமது’ தீவிர​வாத அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள்.

இந்​தச் சதித்​திட்​டம் தொடர்​பாக ஏற்கெ​னவே 8 பேரை கைது செய்​திருந்த தீவிர​வாத தடுப்​புப் படை​யினர், அவர்​கள் கொடுத்த தகவலின் அடிப்​படை​யில் மேலும் 5 பேரைக் கைது செய்​துள்​ளனர்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் பிலால் ஆபித் ஷெரா, முகமது அயூப் கடி​வாலா, முகமது ஷஃபி முகி, முகமது ஹசன் கரடியா மற்​றும் முகமது அயூப் சுனசரா என அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். பாகிஸ்​தானைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் ‘ஜெய்ஷ்-இ-​முகமது’ அமைப்​புடன் இவர்​களுக்​குத் தொடர்பு உள்​ளது. பாகிஸ்​தானின் பகவல்​பூரில் உள்ள இந்த அமைப்​பின் தலை​மையகத்​துட​னும், அதன் முக்​கி​யத் தலை​வர்​களு​ட​னும் இவர்​கள் நேரடி​யாக​வும், தொடர்ச்​சி​யாக​வும் பேசி வந்​துள்​ளனர்.

கைதான நபர்​கள் கடந்த 6 மாதங்​களுக்​கும் மேலாக ஒரு​வருக்​கொரு​வர் தொடர்​பில் இருந்து கொண்​டு, குஜ​ராத் மட்​டுமின்றி இந்​தி​யா​வின் பிற பகு​தி​களி​லும் வெடிகுண்​டுத் தாக்​குதல்​களை நடத்​தத் திட்​ட​மிட்டு வந்​த​தாக முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இவர்​கள் குஜ​ராத்​திலேயே ரகசி​ய​மாக வெடிகுண்​டு​களைத் தயாரித்​துள்​ளனர். மக்​கள் இல்​லாத ஒதுக்​குப்​புற​மான இடங்​களில் 6 முதல் 7 முறை அவற்றை வெடிக்க வைத்​துள்​ளனர். இந்​தச் சோதனை​யில் சில குண்​டு​கள் வெடித்​தன, சில குண்​டு​கள் வெடிக்​க​வில்​லை.

கைது செய்​யப்​பட்ட மூவரிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட மின்​னணு சாதனங்​களை தடய​வியல் சோதனை செய்​த​தில் முக்​கிய ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ளன.

இந்​தி​யா​வின் ‘ஆபரேஷன் சிந்​தூர்’ ராணுவ நடவடிக்​கை​யால் பாகிஸ்​தானில் உள்ள ஜெய்ஷ் தலை​மையகம் பெரும் சேதமடைந்​தது. இதனால் அந்த அமைப்பு தனது நெட்​வொர்க்கை மீண்​டும் உரு​வாக்க முயன்று வரு​கிறது. இந்த புனரமைப்பு முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாகவே கைதானவர்​கள் செயல்​பட்​டார்​களா என்ற கோணத்​தில்​ அதி​காரி​கள்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>பிலால் ஆபித் ஷெரா, முகமது அயூப் சுனசரா, முகமது ஹசன் கரடியா, முகமது அயூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி</p></div>
பத்ரிநாத் கோயிலில் திருட்டு வழக்கு: முன்னாள் அதிகாரி சவுகான் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in