டாடா குழும பிரச்சினையில் நீதியை உறுதி செய்வோம்: ராகுல் கருத்து

டாடா குழும பிரச்சினையில் நீதியை உறுதி செய்வோம்: ராகுல் கருத்து
Updated on: 
1 min read

புதுடெல்லி: டிசிஎஸ், டாடா மோட்​டார்ஸ், டைட்​டன் உள்​ளிட்ட டாடா குழும நிறு​வனங்​களை கட்​டுப்​படுத்​தும் டாடா சன்ஸ் நிர்வாகத் தலை​வர் என்.சந்​திரசேகரனின் பத​விக்​காலம் அடுத்த ஆண்டு பிப்​ரவரி​யில் முடிவடைகிறது. இதையடுத்து, 5 பேர் அடங்கிய குழு அவரை அப்​ப​த​விக்கு மீண்​டும் நியமிக்க பெரும்பான்மை அடிப்​படை​யில் ஒப்​புதல் வழங்​கியது.

இதற்கு அக்​குழு​வில் இடம்​பெற்​றுள்ள நோயல் டாடா மட்​டும் எதிர்ப்பு தெரி​வித்​தார். இந்த விவகாரத்​தை சட்ட ரீதி​யாக அணுகப் போவ​தாக அவர் கூறியுள்​ளார்.

இதுகுறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறி​யிருப்​ப​தாவது: டாடா சன்ஸ் குழு​மம் சட்​ட​விரோத​மாக அழிக்கப்​பட்டு வரு​கிறது. ஆனால் எந்​த வணிகத் தலை​வரும் இதுபற்றி ஒரு வார்த்​தைகூட பேசத் துணி​ய​வில்லை.

நீங்​கள் எவ்​வளவு காலம் மவுனமாக இருக்​கப் போகிறீர்​கள்? அவர்கள் உங்களை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் வரையிலா? இந்​திய வணிகம் என்​பது மோடி மற்​றும் அமித் ஷாவின் விளை​யாட்​டுப்பொருள் அல்ல. உங்​களுக்கு துணிச்​சல் இல்லை. ஆனால் எங்​களிடம் உள்​ளது. இந்​தக் குற்​றங்​களுக்கு நீதி கிடைப்​பதை நாங்​கள் உறுதி செய்​வோம். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

டாடா குழும பிரச்சினையில் நீதியை உறுதி செய்வோம்: ராகுல் கருத்து
விமானத்தில் அவசரகால கதவை திறக்க பயணி முயற்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in