

புதுடெல்லி: இந்தியாவுக்கான அமெ ரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஒரு சிறப்பான சந்திப்பு அமைந்தது. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, போதைப் பொருட்களில் இருந்து நம் மக்களைப் பாதுகாப்பது, நமது எல்லைகளைப் பாதுகாப்பது, இரு நாடுகளிலும் உள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாங்கள் ஒரு பயனுள்ள விவாதம் மேற்கொண்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.