யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக இளைஞரை கொண்டாடிய பிஹார் கிராம மக்கள் - வேறு ஒருவர் என தெரிந்ததால் ஏமாற்றம்

பிஹார் இளைஞர் ரஞ்​சித் குமார்

பிஹார் இளைஞர் ரஞ்​சித் குமார்

Updated on
1 min read

பாட்னா: பிஹாரின் ஷேக்​புரா மாவட்​டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்​தவர் ரஞ்​சித் குமார். யுபிஎஸ்சி நடத்​திய சிவில் சர்​வீஸ் தேர்வு முடிவு​கள் அண்​மை​யில் வெளி​யான நிலை​யில், 440-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதி​காரி ஆகி​யுள்​ள​தாக கிராம மக்​களிடம் ரஞ்​சித் குமார் கூறி​உள்​ளார்.

இதையடுத்து கிராமமே கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. இத்​தகவல் சமூக ஊடகத்​தி​லும் பரவிய நிலை​யில் ஷேக்​புரா தொகுதி முன்​னாள் ஆர்​ஜேடிஎம்​எல்ஏ விஜய் சாம்​ராட் தனது ஆதரவாளர்களு​டன் ரஞ்​சித் குமார் வீட்​டுக்கு வந்​தார். பூங்கொத்தும் பரிசும் கொடுத்து வாழ்த்​தி​னார். ரஞ்​சித் குமாரை உள்​ளூர் போலீ​ஸார் மஹுலி காவல் நிலை​யத்​துக்கு அழைத்து அவருக்கு மாலை அணி​வித்து இனிப்பு வழங்​கி, வெற்​றிக்​காக வாழ்த்து தெரி​வித்​தனர்.

எனினும் இந்த கொண்​டாட்​டம் வெகுநேரம் நீடிக்​க​வில்​லை. கிராமத்​தின் இளைஞர்​கள் சிலர் யுபிஎஸ்சி தேர்வு முடிவு​களை சரி​பார்த்த போது, 440-வது ரேங்க் பெற்​றது ஷேக்​புரா ரஞ்​சித் குமார் அல்ல, கர்​நாட​கா​வின் சிக்​கபள்ளாபூரை சேர்ந்த ரஞ்​சித் குமார் என்​பது தெரிய வந்​தது.

இது குறித்து மஹுலி காவல் நிலைய அதி​காரி ராம்​ பிர​வேஷ் பார்தி கூறுகை​யில், “தகவல் அறிந்து ரஞ்சித் குமார் வீட்​டில் இருந்து தப்பி ஓடி​விட்​டார். அவர் டெல்லி சென்​றுள்​ள​தாக​வும் தொலைபேசி அழைப்​பு​களுக்கு பதில் அளிப்​ப​தில்லை எனவும் குடும்​பத்​தினர் கூறினர். யுபிஎஸ்சி தேர்​வில் தேர்ச்சி பெற்​ற​தாக ரஞ்​சித் வேண்​டும் என்றே ஏமாற்​றி​னாரா அல்​லது தான் தேர்ச்சி பெற்​று​விட்​ட​தாக தவறு​தலாக நம்​பி​னாரா என விசா​ரித்து வரு​கிறோம்” என்​றார்.

<div class="paragraphs"><p>பிஹார் இளைஞர் ரஞ்​சித் குமார்</p></div>
ரவுடியை மணமேடையில் கைது செய்த ம.பி. போலீஸார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in