லிப்ட் கேட்டு ஏறிய லாரி டிரைவரிடம் இருந்து ரூ.20,000 திருடிய உ.பி. போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட்

லிப்ட் கேட்டு ஏறிய லாரி டிரைவரிடம் இருந்து ரூ.20,000 திருடிய உ.பி. போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட்
Updated on
1 min read

லக்னோ: லிப்ட் கேட்டு லாரி​யில் ஏறி, டிரைவரிட​மிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடி​ய போலீஸ் எஸ்​.ஐ. சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி. மாநிலம் ஹமீர்​பூரை சேர்ந்த சப்​-இன்​ஸ்​பெக்​டர் ஒரு​வர், அண்​மை​யில் லாரி டிரைவர் ஒரு​வரிடம் லிப்ட் கேட்டு ஹமீர்பூருக்குச் சென்​றுள்​ளார். ஹமீர்​பூரில் போலீஸ் எஸ்.ஐ இறங்கிய பின்​னர் லாரியி​லிருந்த தனது பணம் ரூ.20 ஆயிரம் மாய​மானதை டிரைவர் அறிந்​தார். இதனிடையே அந்த எஸ்​.ஐ. தனது வாக​னத்​தில் ஏறிச் சென்​றார்.

இதையடுத்து போலீஸ் எஸ்​.ஐ. இந்​தப் பணத்​தைத் திருடியிருக்கலாம் என்று டிரைவர் சந்​தேகித்து எஸ்​.ஐ.யை லாரியில் பின்​தொடர்ந்​தார். சுமார் 13 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு வாக​னத்தை விரட்​டிச் சென்று பிடித்து போலீஸ் எஸ்​.ஐ.யை டிரைவர் மடக்கினார். அப்​போது அவரை சோதனை போட்​ட​தில் அவரது உடை​யில் ரூ.20 ஆயிரம் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக எடுக்​கப்​பட்ட வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலானது. இந்​நிலை​யில் டிரைவரிட​மிருந்து பணத்தைத் திருடிய போலீஸ் எஸ்​.ஐ. உடனடி​யாக சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக ஹமீர்​பூர் கோத்​வாலி நகர் போலீஸ் நிலைய அதி​காரி யஷ்​பால் சிங் தெரி​வித்​துள்​ளார்​.

லிப்ட் கேட்டு ஏறிய லாரி டிரைவரிடம் இருந்து ரூ.20,000 திருடிய உ.பி. போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட்
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சுணக்கம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in