

நொய்டா: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள 4 மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் மின்சார வாகன பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டிருந்தபோது மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் வாகனங்களுக்கு வேகமாக பரவி தீப்பிடித்துள்ளது. இதனால் கட்டிடம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்து தீ மளமளவென பரவியது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹைட்ராலிக் ஏணிகளுடன் தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் கட்டிடம் முழுவதும் பரவிய அடர்ந்த புகையில் சிக்கி,பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் இருந்த மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாகக் கட்டிட உரிமையாளர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கட்டிடத்தில் முறையாகத் தீயணைப்புப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.