

லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் 'அல் ஃபஹத் டூரிசம் கம்பெனி' என்ற ஒரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி நீதிபதி ஒருவரிடம் ஆன்லைனில் ரூ.23.99 லட்சம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது.
புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தை சேர்ந்த உசாமா ரஷீதி, இஜாஸ் அகமது ஆகிய இருவரை கைது செய்தனர். நிறுவனத்தின் இயக்குநர் ஆமிர் ரஷீதி உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.