“பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

கார்கில் வெற்றி தின விழா
பாது​காப்​புத்​துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாது​காப்​புத்​துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated on
1 min read

புதுடெல்லி: காஷ்மீரில் 1999-ம் ஆண்டு மே மாதம் ஊடுருவிய பாகிஸ்​தான் ராணுவத்​தினரை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த வெற்​றியை கொண்​டாடும் விதத்​தில் ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை 26-ம் தேதி கார்​கில் வெற்றி தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் கார்​கில் போரில் வீர மரணம் அடைந்த 527 வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தப்​படு​கிறது. கார்​கில் போரின் 27-ம் ஆண்டு வெற்றி தின நிகழ்ச்சி லடாக்​கின் கார்​கில் போர் நினை​விடத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: “எல்​லை​யில் பாகிஸ்​தான் அத்​து​மீறி​னால், இந்​தி​யா​வின் பதிலடி கற்​பனைக்கு அப்​பாற்​பட்​ட​தாக இருக்​கும். இந்​தி​யா​வின் நோக்​கம் தெளி​வாக உள்​ளது. பாகிஸ்​தானுடன் எந்​தப் பேச்​சு​வார்த்​தை​யும் இருக்​காது. பேச்​சு​வார்த்தை என்று ஒன்று நடந்​தால், அது பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பற்​றிய​தாக மட்​டுமே இருக்​கும். தற்​போது, தீவிர​வாதம் என்​பதை பாகிஸ்​தான் அரசு தனது கொள்​கை​யின் ஒரு பகு​தி​யாக மாற்​றி​விட்​டது. அங்கு ராணுவத்​திற்​கும், தீவிரவாதிகளுக்​கும் இடையே வேறு​பாடு இல்​லை.

பாகிஸ்​தான் ராணுவம் தீவிர​வாத அமைப்​பு​களைப் பாது​காப்​பது மட்​டுமின்​றி, அவர்​களு​டன் இணைந்து நெருக்​க​மாக​வும் செயல்படு​கிறது. எனவே, ‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்​கை​யின் போது, தீவிர​வா​தி​களை​யும் அவர்​களுக்கு ஆதர​வளிக்​கும் அரசுகளை​யும் இந்​தியா இனி தனித்​தனி​யாகப் பார்க்​காது என்பதை நாங்​கள் தெளிவுபடுத்​தினோம். வீரர்​களின் தியாகத்தை இந்​தியா கொண்​டாடும் அதே வேளை​யில், எல்லை தாண்​டிய ஊடுரு​வல் போன்ற தொடர் அச்​சுறுத்​தல்​களுக்கு எதிராக நாடு விழிப்​புடன் இருக்க வேண்​டும்.” இவ்​வாறு அவர் பேசி​னார்.

அவர் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், “கார்​கில் வெற்றி தினத்​தில், தாய்​ நாட்​டின் பாது​காப்​பிற்​காக உயிர்த்தியாகம் செய்த வீரர்​களுக்​கு எனது ஆழ்ந்த மரி​யாதையைச் செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>பாது​காப்​புத்​துறை அமைச்சர்</em>&nbsp;<em>ராஜ்நாத் சிங்</em></p></div>
பிரதான் ராஜினாமா: காலியான ஜந்தர் மந்தர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in