இந்திய பார் கவுன்சில் தலைவரை பதவி நீக்கக் கோரி வழக்கு

இந்​திய பார் கவுன்​சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா

இந்​திய பார் கவுன்​சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய பார் கவுன்​சில் தலை​வர் மனன் குமார் மிஸ்ராவை பதவி நீக்​கம் செய்​யக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் யோகமயா தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய பார் கவுன்​சில் தலை​வ​ராக பதவி வகிக்​கும் மனன் குமார் மிஸ்​ரா, கடந்த 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக அப்​ப​த​வி​யில் தொடர்ச்​சி​யாக நீடித்து வரு​கிறார். இந்​திய பார் கவுன்​சில் தலை​வர் பதவிக்​காலம் 2 ஆண்​டு​கள் என வரையறுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், முறை​யான தேர்​தலை நடத்தாமல் பார் கவுன்​சில் தலை​வர் பதவி​யில் மனன் குமார் மிஸ்ரா நீடிப்​பதை அனு​ம​திக்​கக் கூடாது.

குறிப்​பாக, மனன் குமார் மிஸ்​ரா​வின் பதவிக்​காலத்தை 2030-ம் ஆண்டு வரை நீட்​டித்து பிறப்​பிக்​கப்​பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்​டும். பார் கவுன்​சிலின் சட்​டப்​பூர்வ விதி​களின் கீழ் நிர்​ண​யிக்​கப்​பட்ட பதவிக்​கால வரம்​பு​களை, நிர்​வாக அல்​லது பொதுக் குழு​வின் அறி​விப்பு மூலம் மாற்ற முடி​யாது. எனவே, மனன் குமார் மிஸ்​ராவை பதவி நீக்​கம் செய்​து​விட்​டு, நீதி​மன்​றக் கண்காணிப்பின் கீழ் பார் கவுன்​சில் தலை​வருக்​கான தேர்​தலை நடத்த வேண்​டும்.

மனன் குமார் மிஸ்​ராவை பதவி நீக்​கம் செய்​யும் பட்​சத்​தில், புதிய நிர்​வாகி​கள் தேர்ந்​தெடுக்​கப்​படும் வரை இந்​திய பார் கவுன்​சிலை நிர்​வகிக்க ஓர் இடைக்​காலக் குழுவை அமைக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில்​ கோரப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>இந்​திய பார் கவுன்​சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா</p></div>
சஜ்ஜன் குமாரை ஹீரோ என புகழ்வதா? - ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in