மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா, அமெரிக்காவுக்கு 8 நாட்கள் பயணம்

பொருளாதார உறவை வலுப்படுத்த...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா, அமெரிக்காவுக்கு 8 நாட்கள் பயணம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளா​தார உறவு​களை வலுப்​படுத்​தும் நோக்​கில் கனடா மற்​றும் அமெரிக்க நாடு​களுக்கு 8 நாட்​கள் பயணம் மேற்​கொள்​கிறார்.

தனது பயணத்​தின் முதல் கட்​ட​மாக கனடா​வின் டொராண்டோ நகருக்​கு இன்று செல்​லும் அவர், அந்நாட்​டின் நிதி மற்​றும் வருவாய் துறை அமைச்​சர் பிரான்​சு​வா-பிலிப் சாம்​பேனுடன் இணைந்து முதலா​வது ‘இந்​தியா - கனடா நிதிப் பேச்​சு​வார்த்​தை’ நிகழ்​வில் பங்​கேற்​கிறார். இதில் பொருளா​தா​ரம், நிதித்​துறை ஒத்துழைப்​பு, முதலீடு​கள், ஆற்​றல், தொழில்​நுட்​பம் மற்​றும் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கப்​படு​கிறது.

இதைத் தொடர்ந்து டொராண்​டோ​வில் நடை​பெறும் வர்த்தக மாநாடு​கள் மற்​றும் வட்​டமேஜை ஆலோ​சனைக் கூட்​டங்​களில் பங்​கேற்​கும் நிதி​யமைச்​சர், முன்​னணி கனடா நிறு​வனங்​களின் முதன்மை செயல் அதி​காரி​களை சந்​தித்​து, கிப்ட் சிட்டி - சர்​வ​தேச நிதி மையம் உள்​ளிட்ட நாட்​டின் முக்​கிய முதலீட்​டுச் சூழல்​கள் குறித்​துக் கருத்​துகளைப் பகிர்ந்​து​கொள்​கிறார்.

இதனைத் தொடர்ந்​து, ஆகஸ்ட் 28 முதல் செப்​டம்​பர் 2 வரையி​லான தனது அமெரிக்​கப் பயணத்​தின் போது, நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் சிகாகோ, ஆஷ்​வில்லே மற்​றும் நியூ​யார்க் ஆகிய நகரங்​களுக்​குச் செல்​கிறார். சிகாகோ​வில் முதலீட்டாளர்கள் மற்றும் தனி​யார் நிறுவன தலை​வர்​களை சந்திக்​கிறார். அங்​குள்ள சிகா கோ பல்​கலைக்​கழகத்​தின் போல் ஸ்கி தொழில் முனைவோர் மையத்​தைப் பார்​வை​யிட்​டு, இந்​தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் குறித்​தும் கருத்​துக்​களைப் பரிமாறிக் கொள்​கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா, அமெரிக்காவுக்கு 8 நாட்கள் பயணம்
டெல்லியில் கனமழையால் 26 விமானங்கள் ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in