யுனெஸ்கோ ஆசிய - பசிபிக் பாரம்பரியப் பதிவேட்டில் மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி சேர்ப்பு

யுனெஸ்கோ ஆசிய - பசிபிக் பாரம்பரியப் பதிவேட்டில் மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி சேர்ப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்​கிய வரலாற்று மற்​றும் இலக்கியப் படைப்​பு​களான மகாபாரதம், கவுடில்​யரின் அர்த்தசாஸ்திரம் மற்​றும் கல்​ஹணரின் ராஜதரங்கிணி ஆகிய மூன்று காவியங்​களும், யுனெஸ்கோவின் ‘உல​கின் நினைவகம்’ அமைப்பின் ஆசிய-பசி​பிக் பிராந்​தி​யப் பதிவேட்​டில் அதிகாரப்பூர்வ​மாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

இந்​தி​யாவின் அறி​வுசார் மற்​றும் வரலாற்று ஆவணப் பாரம்பரியத்​துக்கு சர்​வ​தேச அளவில் கிடைத்​துள்ள இந்த மகத்தான அங்​கீகாரத்துக்கு மத்​திய கலாச்​சா​ரம் மற்​றும் சுற்றுலாத்​துறை அமைச்​சர் கஜேந்​திர சிங் ஷெகாவத் வரவேற்பு தெரி​வித்​துள்​ளார்.

1. ராஜதரங்​கிணி

12-ம் நூற்​றாண்​டில் காஷ்மீரைச் சேர்ந்த வரலாற்று ஆசி​ரியர் கல்​ஹணரால் சமஸ்கிருத மொழி​யில் எழுதப்​பட்ட நூல். காஷ்மீரின் அரச வம்​சங்​கள், அரசி​யல் மாற்​றங்​கள் மற்​றும் சமூக வரலாற்​றைக் கால​வரிசைப்​படி துல்​லிய​மாக ஆவணப்​படுத்​திய வரலாற்​றுப் பதிவாக இது போற்​றப்​படு​கிறது.

2. மகாபாரதம்

உல​கின் மிக நீண்ட இதி​காசங்​களில் ஒன்று. கவுரவர்-் பாண்​ட​வர் இடை​யி​லான போரைத் தாண்டி தர்​மம், நீதி, ஒழுக்​கம், ஆட்​சிமுறை மற்​றும் மனிதக் கடமை​களைப் பற்றி பேசுகிறது. இதில் இடம்​பெற்​றுள்ள பகவத் கீதை, உல​களாவிய தத்​து​வச் சிந்​தனைகளுக்கு இன்​றும் வழிகாட்​டி.

3. அர்த்​தசாஸ்திரம்

சாணக்​கியர் என்றழைக்​கப்​படும் கவுடில்​யரால் இயற்​றப்​பட்ட இந்​நூல், பண்​டைய இந்​தி​யாவின் ஆட்சி நிர்​வாகம், பொருளாதா​ரம், வெளி​யுறவுக் கொள்கை, வரிவிதிப்பு, ராணுவ உத்​தி​கள் குறித்த விரிவான வழிகாட்டி.

ஆவணப் பாரம்​பரியங்​கள் அழிந்​துபோகாமல் பாது​காக்​கவும், வருங்​காலத் தலைமுறை​யினருக்கு கொண்டு சேர்க்கவும் 1992-ம் ஆண்டு ‘உல​கின் நினைவகம்’ என்ற திட்​டத்தை யுனெஸ்கோ தொடங்​கியது. இந்​தி​யாவில் இதற்​கான ஒருங்​கிணைப்​புப் பணிகளை இந்​திராகாந்தி தேசிய கலைமையம் மேற்​கொண்டு வரு​கிறது.

ஏற்​கெனவே ரிக் வேதம், சைவ ஆகம கையெழுத்​துப் பிரதி​கள், தமிழ் மருத்​துவ நூல்​கள், காலசக்​கர தந்​திர உரைகள், அபிநவகுப்தரின் படைப்பு ஆகியவை யுனெஸ்கோவின் பதிவேட்டில் இடம்​பெற்​றுள்​ளன. 2023-ல் பஞ்​சதந்​திர கையெழுத்துப் பிரதி​யும் இப்பட்டியலில் சேர்க்​கப்​பட்​டது்.

யுனெஸ்கோ ஆசிய - பசிபிக் பாரம்பரியப் பதிவேட்டில் மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி சேர்ப்பு
பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம்: முறைகேடு தொடர்பாக தவெக - திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு

X