ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி

ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் ரவீந்திரநாத் மிஸ்ரா மேலும் கூறியதாவது: கஞ்சம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்ட இருவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.

பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளி (பெண்), பெர்ஹாம்பூரில் உள்ள எம்பிசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இருப்பினும் அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. கரோனா வைரஸின் வீரியம் குறைந்து விட்டது. இது சாதாரண காய்ச்சல் போன்ற ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர் சந்தோஷ் மிஸ்ரா, அந்தப் பெண் சிகிச்சை பெற்று வரும் பெர்ஹாம்பூர் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்று நிலைமையை கேட்டறிந்தார்.

ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சோனம் வாங்சுக் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in