நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்
Updated on
2 min read

போபால்: நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்​வேறு காயங்​கள் இருந்​த​தாக பிரேத பரிசோதனை அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

உத்தர பிரதேசம், நொய்​டாவை சேர்ந்த நடிகை ட்விஷாவுக்​கும் மத்​திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த வழக்​கறிஞர் சமர்த் சிங்​குக்​கும் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பரில் திரு​மணம் நடை​பெற்​றது. இந்நிலையில் ட்விஷாவை ஆரம்​பம் முதலே கணவர் வீட்​டார் வரதட்​சணை கேட்டு கொடுமை செய்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் கடந்த 11-ம் தேதி போபாலில் உள்ள வீட்​டில் ட்விஷா தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். அவரது மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக தந்தை நவ்​நீதி சர்​மா, தாய் ரேகா சர்மா குற்​றம் சாட்டி உள்​ளனர். இதுதொடர்​பாக ட்விஷாவின் தாய் ரேகா சர்மா கூறும்​போது, “மாமி​யார் வீட்​டில் நடந்த கொடுமை​களை எனது மகள் மொபைல்​போனில் விரி​வாக கூறி​யிருக்​கிறார். எப்​படி​யா​வது தன்னை வீட்​டுக்கு அழைத்​துச் செல்​லு​மாறு கெஞ்சினார்’’ என்றார்.

இந்த சூழலில் ட்விஷா​வின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்​கள் தற்​போது வெளி​யாகி உள்ளன. அவரது கை, காது, முகம், தோள் பட்​டைகளில் காயங்​கள் இருந்​தன. இந்த காயங்​கள் அவர் உயி​ரிழப்​ப​தற்கு முன்​பாக ஏற்பட்​ட​வை என அந்த அறிக்​கையில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. நடிகை ட்விஷா சர்​மா​வின் கடைசி நிமிட வீடியோ ஒன்று சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாக பரவி வரு​கிறது. அதில் போபாலில் உள்ள கணவர் வீட்டில் ட்விஷா படியேறி மாடிக்கு செல்​கிறார்.

பின்​னர் அவரது உடலை கணவர் சமர்த் சிங் உள்​ளிட்ட 3 பேர் மாடிப் படி​யில் இருந்து கீழே தூக்கி வரு​கின்​றனர். இந்த வீடியோ குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர். இதுகுறித்து ட்விஷா​வின் உறவினர்​கள் கூறும்​போது, “தூக்​கில் தொங்கி ட்விஷா உயி​ரிழந்​த​தாக கணவர் குடும்​பத்​தினர் கூறுகின்​றனர். அப்​படி​யென்​றால் போலீ​ஸார் வரும் வரை உடலை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தி​யிருக்​கக் கூடாது.

ஆனால் ட்விஷா​வின் உடல் மாடி​யில் இருந்து கீழே கொண்டு வரப்பட்​டிருப்​பது வீடியோ​வில் உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. பல்வேறு தடயங்​களை கணவர் வீட்​டார் மறைத்​துள்​ளனர். மாமியார் கொடுமை தாங்​காமல் மூத்த மரு​மகள் ஏற்​கெனவே வீட்டை விட்டு வெளி​யேறி​விட்​டாள். எங்​கள் பிள்​ளையை கொலை செய்து விட்​டனர்’’ என்று குற்​றம் சாட்​டினர். ட்விஷா​வின் கணவர் சமர்த் சிங் தலைமறை​வாக உள்​ளார். அவரை பிடிக்க 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. அவரது ஜாமீன் மனுவை போபால் நீதிமன்​றம் தள்​ளு​படி செய்​திருக்​கிறது.

மாமி​யார் விளக்​கம்

ட்விஷா​வின் மாமி​யார் கிரி​பாலா ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: கடந்த ஆண்டு ட்விஷா எங்​கள் வீட்​டுக்கு வந்​தார். எனது மகன் சமர்த் சிங்கை காதலிப்​ப​தாகக் கூறி​னார். அப்​போது ஒழுக்​க​மான பெண் போன்று அவர் நடந்து கொண்​டார். ஆனால் திரு​மணத்​துக்​குப் பிறகு அவருக்கு போதைப் பொருள் பயன்​படுத்​தும் பழக்​கம் இருப்​பது தெரிய​வந்​தது. திரைப்படத் துறை​யில் இருந்​த​தால் அதே வாழ்க்கை முறையை வீட்​டிலும் பின்​பற்​றி​னார். கர்ப்​ப​மான நிலை​யில் கஞ்​சாவை புகைத்து வந்​தார்.

எனது கணவர் ராணுவத்​தில் பணி​யாற்​றி​னார். நாட்​டுக்​காக அவர் உயிரை தியாகம் செய்​தார். எனது மூத்த மகன் விமானப்​படையில் விங் கமாண்​ட​ராக பணி​யாற்றி வரு​கிறார். 2-வது மகன் சமர்த் சிங், கிரிமினல் வழக்​கறிஞர் ஆவார். நாங்​கள் பெயர், புகழோடு வாழும் குடும்​பம். எங்​கள் மீது பொய் குற்​றச்​சாட்​டு​களை சுமத்துகின்​றனர்​. எந்​த வழக்​கு, வி​சா​ரணை​யை​யும்​ சந்திக்கத்தயார். இவ்​வாறு கிரி​பாலா தெரிவித்​தார்​.

நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in