லக்னோ தீ விபத்தில் சோகம்: திருமணம் நிச்சயமான தம்பதியர் உயிரிழப்பு

லக்னோ தீ விபத்தில் சோகம்: திருமணம் நிச்சயமான தம்பதியர் உயிரிழப்பு
Updated on
2 min read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் திருமணம் நிச்சயமான தம்பதியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி மையத்தில் பணியாற்றியவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் நீலேஷ் குமார் மற்றும் அனாமிகா சாமந்த் ஆகியோரும் அடங்குவர். இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கை தீயில் கரைந்தது.

உயிரிழந்த நீலேஷ் மற்றும் அனாமிகா ஆகியோர் பணியிடத்தில் சந்தித்து கொண்டுள்ளனர். இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த வாரம் அனாமிகாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து லக்னோவுக்கு வந்து, நீலேஷ் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இந்நிலையில், நீலேஷ் குடும்பத்தினர் அடுத்த வாரம் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்தச் சூழலில் இருவரும் தீ விபத்தில் உயிரிழந்தனர்.

சொந்த வீடு, பணி உயர்வு, சம்பள உயர்வு, திருமணம் உள்ளிட்டவை கைகூடி வந்த வேளையில் நீலேஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இப்போது நீலேஷ், அனாமிகாவின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லக்னோ தீ விபத்து

உத்​தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்​ளது அலிகஞ்ச் பகுதி. இங்​குள்ள வணிக வளாகத்​தில் விளை​யாட்டு மையம், செல்லப் பிராணி​களுக்​குத் தேவை​யான பொருட்​கள் விற்​பனை மையம், கிளினிக் மற்​றும் பல்​வேறு கடைகள் உள்​ளன. இதன் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்​பட்டு வந்தது. 15 முதல் 17 வயதுக்கு உட்​பட்ட பல மாணவர்​கள் இங்கு பயிற்சி பெற்று வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த வணிக வளாகத்​தின் 3-வது தளத்​தில் நேற்று மதி​யம் திடீரென தீப்​பிடித்​தது. சிறிது நேரத்​தில், அடுத்​தடுத்த தளங்​களுக்​கும் தீ மளமளவென பரவியது. இதில், முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையத்​தில் இருந்த மாணவர்​கள் சிக்​கிக் கொண்​டனர். நுழைவு​வா​யில் வழி​யாகவோ, முன்​பகுதி வழியாகவோ அவர்​களால் தப்​பித்து வெளி​யேற முடிய​வில்​லை.

இதனால், பயிற்சி மையத்​தின் ஜன்​னல்​களை மாணவர்​கள் உடைத்​தனர். அதன் வழி​யாக 7 மாணவர்​கள் கீழே குதித்​தனர். அதில் ஒரு மாணவன் சுற்​றுச்சுவரில் விழுந்​த​தில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. அவர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்குக் கொண்டு செல்​லப்​பட்​டார். ஜன்​னல் வழி​யாக குதித்த மாணவர்​களைக் காப்பாற்ற அக்​கம் பக்​கத்​தினர் உதவினர். மாணவர்​கள் முதல் மாடி​யில் இருந்து குதிப்​பது மற்​றும் ஜன்​னலில் தொங்​கிக் கொண்டிருந்த காட்​சிகள் வலை​தளங்​களில் பரவி காண்​போரை பதற​வைத்​தது.

பயிற்சி மையத்​துக்​குள் மரத்​தால் செய்​யப்​பட்ட மேஜை, நாற்காலிகள் அதி​கம் இருந்​த​தால், தீ வேக​மாகப் பரவியது. சுமார் ஒரு மணி நேர​மாகப் பற்​றியெரிந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்​தனர். தேசிய பேரிடர் மீட்​புக் குழுவினரும் விரைந்து வந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். அனிமேஷன் மையத்​தின் பக்​க​வாட்டு சுவரை உடைத்து மாணவர்கள் மீட்​கும் முயற்​சிகளும் தீவிர​மாக மேற்கொள்ளப்பட்டன. தீ முழு​வது​மாக அணைக்​கப்​பட்ட பிறகு, பயிற்சி மையத்​தில் இருந்து 15 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன.

லக்னோ தீ விபத்தில் சோகம்: திருமணம் நிச்சயமான தம்பதியர் உயிரிழப்பு
மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே| FIFA WC - Match Momentum

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in