அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் மக்களவையில் நேற்று பேசி​ய​தாவது: “இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தத்​தால் அமெரிக்கா மட்​டுமே பலன் அடை​யும். குறிப்பாக அந்த நாட்​டில் இருந்து வேளாண் விளை பொருட்​கள் அதிக அளவில் இறக்​குமதி செய்​யப்பட உள்​ளது. இதனால் இந்​திய விவ​சா​யிகளுக்கு பெரும் பாதிப்​பு​கள் ஏற்​படும்.

அண்​மை​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட மத்​திய பட்​ஜெட் மிகுந்த ஏமாற்​றம் அளிக்​கிறது. சுகா​தா​ரம் உள்​ளிட்ட மக்​களின் அடிப்படை தேவை​களுக்கு பட்​ஜெட்​டில் போதிய நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட​வில்​லை. விவ​சா​யிகளின் வரு​வாய் இரு மடங்​காக உயரும் என்று பாஜக அரசு வாக்​குறுதி அளித்​தது. ஆனால் விவசாயிகளின் நிலை​மை​ மோச​மாக இருக்​கிறது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
பெருமாநல்லூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in