

திருப்பூர்: பெருமாநல்லூர் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. இதில் மத போதகராக ராபர்ட் (58) என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பள்ளியில் படித்து வந்த 7 வயது சிறுமிக்கு ராபர்ட் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பாதிரியார் ராபர்ட்டை கைது செய்தனர்.