மேற்கு வங்கத்தில் 50 எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி: திரிணமூல் காங்கிரஸ் கட்சி உடைகிறது

மேற்கு வங்கத்தில் 50 எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி: திரிணமூல் காங்கிரஸ் கட்சி உடைகிறது
Updated on
2 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் (டிஎம்​சி) இருந்து இடைநீக்​கம் செய்​யப்​பட்ட முக்​கி​யத் தலை​வர் ஒரு​வர், தங்​களுக்கு 50 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு இருப்​ப​தாகக் கூறி அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளார்.

மேற்கு வங்க மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​தது. முதல்​வ​ராகச் சுவேந்து அதி​காரி பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், தேர்​தலில் தோல்வி அடைந்த திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மற்​றும் வெற்றி பெற்ற எம்​எல்​ஏ.க்​கள் பலர் பாஜக.வுக்கு தாவ முயற்​சித்து வரு​கின்​றனர். எனினும், தற்​போதைக்​குத் திரிண​மூல் கட்​சி​யில் இருந்து வருபவர்​களை கட்​சி​யில் சேர்க்க வேண்​டாம் என்று பாஜக மேலிடம் உத்​தர​விட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில், திரிண​மூல் தேசிய செய்​தித் தொடர்​பாள​ரும் மூத்த தலை​வரு​மான ரிஜு தத்தா கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் பாஜக தலை​வர்​களை வெகு​வாகப் பாராட்டி பேசி​னார். தேர்​தலுக்​குப் பிந்​தைய வன்​முறை​யின் போது தனது குடும்​பத்​தைக் காப்​பாற்​றியதற்​காகப் பாஜக தலை​வர்​களுக்கு ரிஜு தத்தா நன்றி தெரி​வித்​திருந்​தார். இதனால் அதிருப்தி அடைந்த கட்​சித் தலை​வர் மம்தா பானர்​ஜி, ரிஜுவை கட்​சி​யில் இருந்து இடைநீக்​கம் செய்தார். இதை போல் மேலும் சிலர் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

இந்​தப் பரபரப்​பான சூழ்​நிலை​யில், ஓட்​டல் ஒன்​றில் கூடிய திரிண​மூல் அதிருப்தி எம்​எல்​ஏ.க்​கள் குழு, தங்​களுக்கு மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை இருப்​ப​தாக உரிமை கோரி​யுள்​ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் ரிஜு தத்தா கூறிய​தாவது:

மேற்கு வங்​கத்​தில் தற்​போது மகா​ராஷ்டிர மாடல் அரசி​யல் அரங்​கேறி வரு​கிறது. எங்​களிடம் மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை உள்​ளது. சுமார் 50 எம்​எல்​ஏ.க்​கள் எங்​களு​டன் இணைந்து செயல்​படு​கின்​றனர். நாங்​கள்​தான் உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ். எனவே, சோவன்​தேப் சட்​டோ​பாத்​யாய்க்​குப் பதிலாக ரிதப்​ரதா பந்​தோ​பாத்​யாய் எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருப்​பார். பெரும்​பான்மை எம்​எல்​ஏ.க்​கள் எங்​கள் வசம் இருப்​ப​தால், கட்​சி​யின் சின்​னத்தை நாங்​களே தக்க வைத்​துக் கொள்ள அனு​ம​திக்க வேண்​டும். இவ்​வாறு ரிஜு தத்தா கூறி​யுள்​ளார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஆவணங்களில் தங்​களது கையெழுத்​துகள் போலி​யாகப் போடப்​பட்​டுள்​ள​தாக, கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்ட ரிதப்​ரதா பந்​தோ​பாத்​யாய் மற்​றும் சந்​தீபன் சாகா ஆகிய திரிண​மூல் மூத்த தலை​வர்​கள் குற்​றம் சாட்​டி​யிருந்​தனர். இந்த கையெழுத்து மோசடி தொடர்​பாக சிஐடி விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 80 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. தற்​போது 50 எம்​எல்​ஏ.க்​கள் போர்க்​கொடி தூக்கி உள்​ள​தால், கட்சி 2 ஆக உடை​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. அத்​துடன், கட்​சி​யும் சின்​ன​மும் மம்தா பானர்​ஜி​யின் கையை விட்டு செல்​லும் சூழல் உரு​வாகி இருக்​கிறது.

‘செய் அல்​லது செத்து மடி’: கொல்​கத்​தா​வில் மம்தா பேச்சு

திரிணமூல் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றைக் கண்டித்தும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. இதில் 177 தொகுதிகளில் பாஜக முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது. முதலில் எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றன. நான் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன். ஆனால் முறைகேடுகளால் தோல்வி அடைந்தேன்.

சமீப காலமாக எனது கட்சித் தலைவர்களே துரோகிகளாக மாறி வருகின்றனர். எனக்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் சதி வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். திரிணமூல் கட்சியைக் கட்டிக்காக்க ‘செய் அல்லது செத்துமடி’ என்ற வகையில் நாம் செயல்பட வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 50 எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி: திரிணமூல் காங்கிரஸ் கட்சி உடைகிறது
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in