என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி டிஎம்சி எம்.பி.க்கள்

என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி டிஎம்சி எம்.பி.க்கள்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தல் தோல்​வியைதொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் (டிஎம்சி) எம்.எல்​.ஏ.க்​கள் மற்​றும் எம்​.பி.க்​கள் கட்​சித் தலை​வரும், முன்னாள் முதல்​வரு​மான மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக போர்க்கொடி தூக்​கினர்.

இந்நிலையில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணி​யாக பிரிந்து எதிர்க்​கட்சி அந்தஸ்தை பெற்​றனர். இதேபோல் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சியில் 20 மக்​களவை எம்​.பி.க்​கள் தனி அணி​யாக செயல்பட முடிவு செய்​தனர்.

இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் செயல்​பட்டு வரும் இந்​திய தேசிய​வாத குடிமக்​கள் கட்​சி​யுடன் (என்​சிபிஐ) இணைந்து செயல்பட திரிண​மூல் காங்​கிரஸின் 20 எம்​.பி.க்​களும் முடிவு செய்தனர். அதன்​படி நேற்று என்​சிபிஐ கட்​சி​யுடன் அதிருப்தி திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் 20 பேரும் அதி​காரப்​பூர்​வ​மாக தங்​களை இணைத்​துக் கொண்​டனர். கட்​சித் தாவல் சட்​டத்​தின்​கீழ் பதவி பறிக்​கப்​படு​வதைத் தடுக்க இந்த முடிவை அவர்​கள் எடுத்​துள்​ளனர்.

இதையடுத்து அந்​தக் கட்​சி​யின் மக்​களவை தலை​வ​ராக ககோலி கோஷ் தாஸ்​தி​தார் இருப்​பார். அவரே என்​சிபிஐ கட்​சி​யின் தலைவராக​வும் செயல்​படு​வார் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விடம் என்சிபிஐ கட்​சி​யுடன், அதிருப்தி எம்​.பி.க்​கள் 20 பேர் இணைந்த விவகாரத்தை கடித​மாகக் கொடுத்​துள்​ளனர்.

தங்​களை அதி​காரப்​பூர்​வ​மாக என்​சிபிஐ கட்​சி​யாக மக்களவையில் அங்​கீகரிக்​க வேண்​டும்​ என்​றும்​ மக்​களவை​யில்​ தங்​களுக்​கென தனி இடம்​ ஒதுக்​க வேண்​டும்​ என்​றும்​ அவர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி டிஎம்சி எம்.பி.க்கள்
நிம்மதியான மரணம்... உங்களுக்கு Living Will தெரியுமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி டிஎம்சி எம்.பி.க்கள்
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கார்கே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in